தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 juni 2015

ஆஸியில் இருந்து நாடு கடத்தப்பட்ட இளைஞர்கள் கைது!

வீட்டிற்குள் வெடிமருந்தினை மறைத்து வைத்த பெண் யாழில் கைது
[ சனிக்கிழமை, 20 யூன் 2015, 11:44.52 AM GMT ]
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 12 கிலோ 800 கிராம் நிறை கொண்ட சி-4 வெடி மருந்தினை வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் யாழ்.பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
மேற்படிப் பகுதியினைச் சேர்ந்த 43 வயதான குடும்பப் பெண்னே இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளில் கிளிநொச்சி மாவட்டம் பளைப் பகுதியினைச் சேர்ந்த தூரத்து உறவினரகள் இருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருகைதரும் போது தனது வீட்டில் ஒரு பையினை வைத்துவிட்டுச் சென்றார்கள்.
வேறு ஒரு நாள் வருகின்ற போது அந்த பையினை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்திருந்தார்கள்.
ஆனால் இதுவரையில் அந்தப் பையினை எடுப்பதற்கு அவர்கள் வரவில்லை. அதற்குள் இருந்தது வெடிமருந்து என்று தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெடிமருந்தினைக் கொண்டுவந்த பளைப் பகுதியனைச் சேர்ந்த இருவரையும் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.

யாழ். நீதிமன்ற தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது
யாழ்.நீதிமன்றத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொறு இளைஞர் நேற்று யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாவாந்துறைப் பகுதியினைச் சேர்ந்த இளைஞரே குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் ஆவர்.
நீதிமன்றத் தாக்குதல் சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தினை நோக்கி கல் வீச்சு மேற்கொண்டதற்கான புகைப்பட ஆதாரமாகக் கொண்டே குறித்த நபர் நேற்று நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு மேற்கொண்டுள்ளனர்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாணையில் தான் நீதிமன்றத்தின் மேல் தாக்குதல் மேற்கொண்டார் என்று ஒப்புக் கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஆஸியில் இருந்து நாடு கடத்தப்பட்ட இளைஞர்கள் கைது
[ சனிக்கிழமை, 20 யூன் 2015, 10:38.22 AM GMT ]
சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியா சென்ற இரண்டு இளைஞர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த இளைஞர்கள் தலா 8 இலட்சம் ரூபாவை செலுத்தி மூன்று வருடங்களுக்கு முன்னர், படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தனர்.
30 வயதான இந்த சந்தேக நபர்கள் சிலாபம் உடப்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் திகதி சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த முகவர் ஒருவருக்கு தலா 8 இலட்சம் ரூபாவை வழங்கி விட்டு, மேலும் சிலருடன் இணைந்து படகில் எறி அவுஸ்திரேலியா சென்றுள்ளனர்.
இந்த இளைஞர்கள் அவுஸ்திரேலியாவில் பல்வேறு தொழில்களை செய்து வந்த நிலையில், அந்நாட்டு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyGRUSUft0C.html

Geen opmerkingen:

Een reactie posten