தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 juli 2015

பிரதமர் பதவி கேட்கும் நபர்கள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்: சந்திரிக்கா

மகிந்த தேர்தலில் போட்டியிட்டால் வியாழகுரு அவரை சும்மா விடாது
[ புதன்கிழமை, 01 யூலை 2015, 11:03.06 AM GMT ] [ வலம்புரி ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்­ போட்டியிடுவாரா? என்பது பற்றிய முடிவுகள் இதுவரை தெரியவில்லை.
போட்டிடுவார் என்கிறது ஒரு தரப்பு. போட்டியிட மாட்டார் என்பது மற்றொரு தரப்பின் முடிவு.பொதுப் பார்வையில் தேர்தலில் குதிப்பது போல மகிந்தனார் காட்டாப்புக் காட்டுகிறார் என்ற கருத்தும் உண்டு.
எது எப்படியாயினும் இந்த நாட்டில் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்­வுக்கு இந்த நாட்டின் ஒரு பிரஜை என்ற வகையில் சாத்திரம் சொல்வது கடமை என்று கருதுகிறோம்.
அட! முன்பும் சாத்திரம் கேட்டுத்தானே அந்தாள் கவுண்டு போனது என்று நீங்கள் நினைக்கலாம். இது குணதாஸவின் சாத்திரம் அல்ல. ஆகையால் இந்தச் சாத்திரத்தைக் கேட்பது நல்லது.
அதாவது, கெடுகாலமுள்ள ஒருவருக்கு திருமணம் நடைபெறப் போகிறது என்று எடுத்துக் கொள்வோம். கெடுகாலத்திலும் நல்லது நடக்கிறது என்று மற்றையவர்கள் நினைக்கலாம். இங்குதான் ஒரு உண்மையை உணரத் தவறுகிறோம்.
கெடுதி என்பது மங்களகரமான காரியத்தினூடாகவும் அணுகலாம் என்பதுதான் அந்த உண்மை. கெடுகாலத்தில் திருமணம் செய்து கொண்டால், துன்பம் திருமணத்தினூடாக அணுகப்போகிறது என்பது சோதிட சங்கதி. இது போலத்தான் மகிந்த ராஜபக்சவின் நிலைமையும் உள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நானே வெற்றி பெறுவேன் என்று நம்பியிருந்த மகிந்த தோல்வி கண்டார். தேர்தலை நடத்தாமல் இருந்திருந்தால், இன்னும் இரண்டு ஆண்டுகள் ஜனாதிபதிப் பதவியில் இருந்திருக்கலாம்.
என்ன செய்வது காலம் பிழைத்தால் மகிந்தவும் எதுவும் செய்யமுடியாதென்பது நியதி. இரண்டு ஆண்டுகள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியில் இருக்க வேண்டிய மகிந்த, அதனை இழந்துவிட்டு இப்போது பொதுத் தேர்தலில் போட்டியிட முற்படுவது; தன் மீது ஏற்படக்கூடிய விளக்கம், விசாரணைகளை தடுக்க என்பது தெரிந்த விடயம்.
பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெல்வதன் மூலம் தப்பித்துக் கொள்ளலாம் என்று அவர் நினைக்கிறார்.
ஆனால் உண்மையில் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் - அரசியலில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறுகிறேன் என்று மகிந்த அறிவிப்பதன் மூலமே தப்பித்துக் கொள்ளலாம் என்பதை அவர் மறந்துள்ளார்.
ஆம்! மகிந்தவை வீட்டுக்கு அனுப்புவதில் அமெரிக்கா என்ற வியாழ குரு கடுமையாகப் பலன் செய்தது. மகிந்தவை வீட்டுக்கு அனுப்பி மைத்திரியை ஜனாதிபதி ஆக்குவதில் வியாழ குருவாகிய அமெரிக்கா தீட்டிய திட்டங்கள் ஏராளம்.
மகிந்த வீடு சென்றதும் வியாழகுரு அமைதியடைந்தது. ஆனால் மீண்டும் மகிந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவாராயின், அது வியாழகுருவுக்குக் கடுங்கோபத்தை உண்டு பண்ணும்.
இதனால் மகிந்த கடும் துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும். மகிந்த மீது சர்வதேச விசாரணை நடத்தி, அவரைக் குற்றவாளியாக அறிவித்து, அவரைக் கைது செய் என்று அமெரிக்க வியாழகுரு நினைக்கலாம்.
ஆகையால் மகிந்தனார் பேசாமல் வீட்டில் இருப்பதே புத்திசாலித்தனம் என்பது நம் சோதிடம். இதை கருத்தில் கொள்ளாமல் இதோ தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்று செய்து காட்டுகிறேன் பார் என்று மகிந்த ராஜபக்­ நினைத்தால், கெடுகாலம் அவரை அப்படி நினைக்க வைக்கிறது. வியாழ சுகம் இல்லாமல் எவரும் எதுவும் செய்ய முடியாது.

பிரதமர் பதவி கேட்கும் நபர்கள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்: சந்திரிக்கா
[ புதன்கிழமை, 01 யூலை 2015, 10:52.34 AM GMT ]
நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக செயற்பட்டிருந்தால் இன்று பிரதமர் பதவி கேட்கும் நபர்கள் சிறையில் இருப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
குற்றம் இழைத்திருப்பின் அவர் நாட்டு மன்னராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
கடந்த அரசாங்கத்தில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் இன்று சிறையில் இருக்க வேண்டும். எனினும் அவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வர துடிக்கின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனநாயக ரீதியில் மக்களுக்காக போராடி மனிதாபிமான கட்சி என்று பெயர் எடுத்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் கறுப்பு கறை படிந்ததிருந்தது.
எனினும் கடந்த ஜனவரி 8ம் திகதி நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து அந்த ஆட்சியை வீட்டுக்கு விரட்டியடித்துள்ளனர்.
அத்துடன் ஜனவரி 8ம் திகதிக்கு பின் முக்கியமான நபர்கள் வாழக்கூடிய நாடாக இலங்கையை மாற்றி புது சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளோம். முடிந்தபோன சந்தர்ப்பத்தை மீண்டும் அழைத்து நாட்டை அழிவுக்கு கொண்டு செல்ல சிலர் முயற்சிக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyHTVSUeq4I.html

Geen opmerkingen:

Een reactie posten