தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 juni 2015

"அகதிகளை நாடு கடத்துவதை நிறுத்துங்கள்": ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம் (வீடியோ இணைப்பு)

சர்வதேச அகதிகள் தினத்தை முன்னிட்டு ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் புகலிடம் தேடி வந்த அகதிகளை நாடுகடத்துவதற்கு எதிராக அகதிகளின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் எதிர்கட்சிகளான Die Linke, Gruenen மற்றும் சில சமூக நல அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் நேற்று மாபெறும் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒட்டுமொத்த நபர்களும் ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் கோரி வரும் வெளிநாட்டு மக்களுக்கு தங்களுடைய ஆதரவு உண்டு என கோஷம் எழுப்பினர்.
சுமார் 2,500 பேர் கலந்துக்கொண்ட இந்த ஊர்வலம் Kreuzberg நகரிலிருந்து புறப்பட்டு பெர்லின் நகரின் மையத்தில் உள்ள Brandenburg பகுதி வரை சென்றது.
ஐரோப்பிய நாடுகளிலிருந்து அகதிகளை நாடு கடத்துவதற்கு எதிராக கோஷம் போட்ட அவர்கள், ஜேர்மனி நாட்டிற்கு புகலிடம் கேட்டு வரும் வெளிநாட்டினருக்கு தங்களுடைய ஆதரவு எப்போதும் உண்டு என உணர்ச்சி பொங்க கோஷம் எழுப்பினர்.
ஐரோப்பிய நாடுகளில் குடியேற முயற்சித்து மத்திய தரைக்கடலில் ஆயிரக்கணக்கானோர் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்த அவர்கள், உள்நாட்டு போர்களினால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு உடனடியாக தஞ்சம் அளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினர்.
ஜேர்மனி நாடு சுமார் 30 ஆயிரம் அகதிகளுக்கு புகலிடம் அளிக்க வேண்டும் என ஐ.நா சபை வலியுறுத்தியுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை போதாது என்றும் ஜேர்மனி நாடு ஒரு மில்லியன் அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக கிரேக்க நாடு கடன் தொல்லையில் அவதியுற்ற வரும் நிலையில், அந்நாட்டை சேர்ந்த மக்கள் ஜேர்மனியில் தஞ்சம் கோரி வர வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அகதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் விவகாரங்களில் ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் விரைந்து செயல்பட வேண்டும் என்பதே போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
 
http://newsonews.com/view.php?22cM08Se20dBnBVb4e2cAOl72cb40gAm0dd34oMMC2bceXlO4ce40nBnB4203d880eb3

Geen opmerkingen:

Een reactie posten