தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 juni 2015

நாம் இன்று அமைதியையும் விடிவையும் தேடுகின்றோம்: சின்மயாமிசன் சுவாமிகள்

காவற்துறையினர் மீது தாக்குதல்: 15 பேருக்கு விளக்கமறியல்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூன் 2015, 06:06.29 AM GMT ]
யாழ்ப்பாணம், கொடிகாமம் பிரதேசத்தில் காவற்துறையினரை தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 15 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை சாவகச்சேரி பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எதிர்வரும் மாதம் 03ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்களில் 10 ஆண்கள் மற்றும் 05 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
நேற்று முன்தினம் போதை பொருள் சுற்றிவளைப்பிற்கு சென்ற போது காவற்துறை  அதிகாரிகளை தாக்கியதாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


நாம் இன்று அமைதியையும் விடிவையும் தேடுகின்றோம்: சின்மயாமிசன் சுவாமிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூன் 2015, 08:41.10 AM GMT ]
கடந்த இருபது வருடங்களாக சமூக கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்திவரும் ஓம் கிரியா பாபாஜி யோக ஆரண்யம், வவுனியா கனகராயன் குளத்தில் இன்று அதன் கிளை ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப வைபவத்தை நடத்தியிருந்தது.
சர்வதேச யோகா தினமான இன்று நடத்தப்பட்ட இந்த வைபவத்தில் சின்மயாமிசன் சுவாமிகள், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் பேராசிரியர் நவரத்தினராசா, யோகா நிலையத்தை ஆரம்பிப்பதற்கான மூலகர்த்தா ஆறுமுகம் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
இவ்விழா தொடர்பாக ஓம் கிரியா பாபாஜி யோக ஆரண்யம் விடுத்துள்ள குறிப்பில் தன்னலமற்ற சேவைகளின் மூலம் நல்ல சமய சொற்பொழிவுகள் மெய்ஞான தத்துவ ஆன்மீக ஞானம் கொண்ட அறிஞர்களின் ஆழந்தகன்ற நுண்ணிய சிந்தனை கருத்துரைகள் யோகாசன பயிற்சி முறை செயற்பாடுகள் போன்ற சமுதாய உயர்வுக்கான நிகழ்வுகளையும் ஆரண்யம் இலவசமாக செய்து மக்களை நல்வழிப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
வாரம் தோறும் திருமந்திர வகுப்புக்களை நடாத்துதல், அறநெறி பாடசாலை மூலம் மாணவர்களுக்கு நல்லறிவு ஊட்டுதல்,திருமுறை முற்றோதல், கைவல்யநவநீதம், பஜகோவிந்தம், பகவத்கீதை, கருடபுராணம் படிப்பதோடு குருபூசைகளையும் செய்து வருகின்றது.
யோகாசனம் மூச்சுப்பயிற்சி தியானம் ஆற்றுப்படுத்தல் சிறப்பான அம்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் உரை வழங்கிய சின்மியா சுவாமிகள் இன்று நாங்கள் ஆனந்தத்தை விடிவை அமைதியை தேடுகின்றோம்.சகல ஜீவராசிகளும் அதையே விரும்புகின்றது.ஆனால் எதிலும் தற்காலிக ஆனந்தம் தற்காலிக விடுதலையே கிடைக்கின்றது.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து வாழ்ந்த மகான்கள் ஞானிகள் வாழ்க்கை ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டு அற்புதமான வாழ்வு வாழ்ந்திருக்கின்றார்கள்.
அவர்கள் உருவாக்கி வைத்த யோகா சாத்திரங்களைத் தான் இன்று நவீனத்தில் உயர்ந்த மேலைத்தேய சமுதாயமும் நாடுகின்றது.யோகக்கலை ஆனந்தத்தை இணைப்பதாக அமைகின்றது.முத்தி என்பதும் ஆனந்தமே என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyGRVSUft6G.html

Geen opmerkingen:

Een reactie posten