முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இணைக்கும் முயற்சியில் ஆறு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்கப்பதற்கு நேற்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
குறித்த கூட்டம் ஒரு மணித்தியாளத்திற்கும் அதிக நேரம் இடம்பெற்றுள்ள நிலையில், இக்கூட்டம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித் சேனாரத்னவிடம் ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியுள்ளார்கள்.
அதற்கு, ராஜித குறிப்பிட்டதாவது, “என்ன நான் சொல்ல வேண்டும்? கலந்துரையாடல்கள் குறித்து செயளாலர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். இல்லை, இல்லை நான் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. இடத்தினை வழங்கிவிட்டு செல்லுங்கள்.
நான் என்ன பேச வேண்டும் என்பதும் பேச கூடாது என்பது குறித்தும் எனக்கு தெரியும். என்னிடம் எதனையும் கேட்காதீர்கள். பேசாமல் போ பலவந்தமாக என்னை பேச வைக்க முடியாது” இவ்வாறு அமைச்சர் ராஜித ஊடகவியலாளர்களை புறக்கணித்துவிட்டு சென்றுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten