இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடையும் பணியை, விடுதலைப் புலிகளின் சார்பில் நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோர் முன்னெடுத்திருந்தனர். எனினும் இருவரும் தன்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என அருட்தந்தை ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்
எனினும் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு ஊடாக, இராணுவ பேச்சாளராக இருந்த பாலித்த கோஹன்வுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சரணடைதல் தொடர்பாக கலந்துரையாடி இருந்தனர்.
இந்தத் தகவல் பசில் ராஜபக்ஷ ஊடாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரியப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
இறுதிக்கட்ட போரின் போரின் போது, இந்திய மத்திய அரசாங்கத்தில் இருந்த காங்கிரஸின் சுயநல அரசியல் தொடர்பாகவும், அதனுடாக விடுதலைப் புலிகளை வலைக்குள் வீழ்த்தும் உத்திகளை எவ்வாறு பிரயோகித்தனர் என்ற பல்வேறு விடயங்களை செவ்வியின் ஊடாக பகிர்ந்து கொண்டார்.
Geen opmerkingen:
Een reactie posten