தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 15 juni 2015

இந்த நிலை மகிந்தருக்கு வருமா ? சூடான் ஜனாதிபதி ஜொகானாஸ் பேர்கில் வைத்து முடக்கப்பட்டார் !


தென்னாபிரிக்காவின் ஜோஹன்னர்ஸ் பேர்க் நகரில் நடைபெறும் ஆபிரிக்க ஒன்றிய மாநாட்டில் கலந்து கொள்ள தென்னாபிரிக்கா சென்றுள்ள சூடான் ஜனாதிபதி ஒமர் அல்-பஷிரை கைது செய்யுமாறு தென்னாபிரிக்க அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கேட்டுள்ளதை அடுத்து, அவர் தென்னாபிரிக்காவை விட்டு வெளியேறக் கூடாது என்று தென்னாபிரிக்க உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை வரை இடைகால தடை விதித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒமர் அல்-பஷீர் கைது செய்யப்பட்டு சர்வதேச நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டுமா இல்லையா என்று இன்று தீர்ப்புக் கூறும் வரை அவர் தென்னாபிரிக்காவை விட்டு வெளியேறக்கூடாது என்று பிரிட்டோரியாவில் உள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆபிரிக்க ஒன்றிய மாநாட்டில் கலந்து கொள்ளும் சகல நாடுகளின் தலைவர்களுக்கும் சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்குவது என்ற தென்னாபிரிக்க அரசின் முடிவை மற்றக் கோரி தென்னாபிரிக்காவின் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று உயர் நீதிமன்றத்தில் செய்துள்ள அவசர மனு மீதான தனது தீர்ப்பு இன்று அளிக்கப்படும் வரையிலேயே பஷீர் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்கும் உத்தரவை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
சூடானில் 2003 ஆம் ஆண்டு ஆரம்பமான டாபூர் நெருக்கடியின் போது போர்க்குற்றச்சாட்டு, இனப்படுகொலை மற்றும் மனிதாபிமானத்துக்கெதிரான குற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டதாக பஷீர் மீது சர்வதேச நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நெருக்கடியின்போது சுமார் 400,000 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். பல மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். இந்த யுத்தத்தின்போது கறுப்பின ஆபிரிக்கர்களை பஷீரின் படைகள் வேண்டும் என்றே கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதே நிலை தான் இலங்கையிலும் இருந்தது. ஆனால் மகிந்த ராஜபக்ஷ தப்பிவந்துள்ளார். இனி அவர் வேறு எந்த நாட்டிற்குச் சென்றாலும் , இது போன்ற ஒரு நிலை ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten