தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 juni 2015

பிரித்தானிய அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைக்கு எதிர்ப்பு: பாராளுமன்றத்தின் முன் குவிந்த லட்சக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் அமைந்துள்ள புதிய அரசின் சிக்கன நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான மக்கள் பாராளுமன்றத்தின் முன் குவிந்தனர்.
பிரித்தானியாவில் அமைந்துள்ள புதிய அரசு நாட்டின் வரவு செலவு பற்றாகுறையை குறைக்க சிக்கன நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் நிதியமைச்சர் ஜார்ஜ் ஓஸ்பார்ன் அரசாங்க துறைகள் மக்களுக்கு செலவு செய்யும் தொகையை குறைத்துகொள்ள வேண்டும் என்று தான் விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும் மக்களின் சமூக பாதுகாப்பு நலனுக்கான செலவு செய்யப்படும் தொகையில் இருந்து 12 பில்லியன் பவுண்ட்டை குறைக்கவும் அரசாங்கம் முடிவு செய்ததாக தகவல் வெளியாகியது.
இந்த முடிவு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. எனவே அரசாங்கத்துக்கு தங்கள் எதிர்ப்பை காட்ட முடிவு செய்தனர்.
அதன்படி லட்சக்கணக்கான மக்கள் லண்டனில் உள்ள பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர்.
தங்களில் கைகளில் அரசின் நடவடிக்கைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்றனர்.
பின்னர் பாராளுமன்றத்தை அடைந்ததும் அரசின் முடிவுக்கும் பிரதமர் கேமரூன், நிதியமைச்சர் ஆஸ்போர்ன் ஆகியோருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது எனவும், மக்களுக்கு செலவு செய்யப்படும் தொகையை குறைக்ககூடாது எனவும் தெரிவித்தனர்.
இந்த பேரணியில் 2, 50,00 மக்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிலாஸ்கவ் மற்றும் லிவர்பூல் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.





Geen opmerkingen:

Een reactie posten