தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 13 juni 2015

கனடாவின் புதிய குடிவரவு சட்டம்! 140,000 இலங்கையர்களை பாதிக்கலாம்

கனடாவில் வசிக்கும் 140,000 இலங்கைப் பிரஜைகள், தமது பிரஜாவுரிமையை இழந்து இலங்கை திரும்ப கூடிய வாய்ப்பு உள்ளதாக தெ நேசன் பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளது.
புதிய சட்டத்தின் படி கனடாவில் பிறந்த அதன் பிரஜைகள் மாத்திரமே அதன் பிரஜாவுரிமையை இழக்க மாட்டார்கள். அவர்கள் மீது எவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும் அவர்களது பிரஜாவுரிமை பறிபோகாது.
இந்த சட்டம் ஒரு புறக்கணிப்பு நடவடிக்கை என்று குற்றம் சுமத்தப்பட்ட போதும் அதனை மறுத்துள்ள கனேடிய அரசாங்கம், கனேடியர்களை பாதுகாப்பதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்தில் இருந்து கனடாவை பாதுகாப்பதே புதிய சட்டத்தின் நோக்கம் என்று கனடாவின் குடிவரத்துறை அமைச்சர் கிரிஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அங்கு பிறக்காமல் பிராஜாவுரிமை பெற்றவர்களின் பிரஜாவுரிமை எந்த நேரத்திலும் பறிக்கப்படலாம். அவர்களுக்கு எதிர்காலத்தில் இரண்டாந்தர அந்தஸ்த்தே காணப்படும்.
இதேவேளை, குறிப்பிட்ட சட்டமூலம் மேலும் விஸ்தரிக்கப்பட்டு மேலும் ஆபத்தானதாக மாற்றப்படலாம் என சட்டவல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyGSXSUfo1H.html

Geen opmerkingen:

Een reactie posten