இதில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில்,
பாரம்பரியமும் நூற்றாண்டு பெருமையும் மிக்க கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வு கூடத்திறப்பு விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் இந்த விழாவை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் சிறப்பாக நடத்திக் கொண்டிருப்பதை பார்க்கும்போது இந்த பாடசாலையின் நூற்றாண்டு அனுபவம் வெளிப்படுகின்றது.
இந்தப்பாடசாலைக்கு நான் முன்பு வராத போதும் இந்த பாடசாலையின் முன்னாள் அதிபர் நாட்டுப்பற்றாளர் சிவகடாட்சம் என்ற தமிழ் தேசிய பற்றுள்ள அதிபர் மூலம் இந்த பாடசாலையின் தியாக அனுபத்தை உணர்ந்துள்ளேன்.
இந்த பாடசாலைத்தாய் இந்த மண்போற்றத்தக்க மனிதர்களை தந்துள்ளார். யாழ் மண்ணில் இந்தப்பாடசாலையும் பெருமை சேர்க்கின்றது.
இந்த மண் உயர்ந்த விற்பன்னர்களை தந்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் பெரும் அறிவுப் பொக்கிசமுமான பேராசிரியர் துரைராஜா அவர்களின் கண்டுபிடிப்புக்கள் தொழில்நுட்ப விதிகள் இன்றைக்கும் உலகத்தால் போற்றப்படுகின்றன.
வெளிநாட்டு, உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் அவரின் ஆய்வுகள் முடிவுகள் இன்று பயன்படுகின்றன.கற்பிக்கப்படுகின்றன.
கல்விக்கும் பண்பாட்டுக்கும் பெயர்போன யாழ்ப்பாண மண்ணை இன்றைக்கு சிதைப்பதன் கூலம் தமிழர்களின் அறிவுத்திறனை மழுங்கடித்து அடிமைகள் ஆக்கலாம் என்ற வகையில் இன்றைக்கு போதைப்பொருள் பாலியல் வன்புணர்வுகள் அரங்கேற்றப்படுகின்றன.
இவற்றை நாம் தெளிவுற அறிந்து இத்தகைய தொழில்நுட்ப ஆய்வு கூடங்களை சரவர பயன்படுத்தி நாம் எந்த தொழில்நுடபங்கள் மூலம் அழிக்கப்பட்டோமோ, அவற்றைய நாம் கைவசப்படுத்தி இந்த உலகத்துக்கு அறிவுச்சவாலாக நாம் விளங்க வேண்டும் என்றார்.
இந்த தொழில்நுட்ப ஆய்வு கூடத்திறப்பு விழாவில் யாழ்ப்பாண வலய கல்விப் பணிப்பாளர் தெய்வேந்திரராசா, கோப்பாய் பிரதேச சபையின் உப தவிசாளர் தர்மலிங்கம், கோட்டக்கல்வி அலுவலர்கள், பாடசாலை சமுகத்தினர் என பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten