இன்னர் சிட்டி பிரஸ் தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட போது, அமெரிக்கா அது தொடர்பில் செயற்பட தவறிவிட்டதாக இன்னர் சிட்டிபிரஸ் அவரிடம் சுட்டிக்காட்டியது.
அத்துடன் அந்த காலகட்டத்தில் செயற்படாமல் தற்போது அமெரிக்கா இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை முன்வைக்கின்றமை தொடர்பிலும் அவரிடம் இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதில் வழங்கிய பொஸ்னர், இலங்கை விடயத்தில் அமெரிக்கா வெற்றிகரமாக செயற்பட்டதாகவும் இராஜாங்க திணைக்களத்தின் அதிகாரிகளான ஜெக்கொப் சிம்மர்மேன் மற்றும் விக்ரங் சிங் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.
எனினும் இலங்கையில் 40 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் எந்த பதிலையும் வழங்கவில்லை என்று இன்னர் சிட்டி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten