யுவதியின் மரணத்தை ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரகம் ஊர்ஜிதம் செய்வதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய கூறினார்.
கெக்கிராவ, கிரிமிட்டியான பகுதியைச் சேர்ந்த 24 வயதான மேற்படி யுவதியே சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருப்பதாக அவரது குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.
குறித்த யுவதி 2007ஆம் ஆண்டு தொழில் நிமித்தம் வீட்டுப் பணிப்பெண்ணாக தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்நிலையத்தினூடாக ஜோர்டான் அனுப்பிவைக்கப்பட்ட போதும் கடந்த ஆறு வருடங்களாக அவர் தொடர்பில் எந்வொரு தகவலும் கிடைக்கவில்லையென யுவதியின் வீட்டார் கூறினர்.
இது தொடர்பில் ஜோர்தானிலுள்ள எமது இலங்கை தூதரகம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ள அதேவேளை சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளி நாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten