தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 5 maart 2013

அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றினாலும் பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது!- சிங்கள ஊடகம் !


ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றினாலும் பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையினால் மட்டுமே பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும்.
ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், சீனாவும் ரஸ்யாவும் அதனை எதிர்க்கும்.
வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முறியடிக்க நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்குமாறு புலி ஆதரவாளர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கோரியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இதேவேளை, இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளதாக சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சனல்4  ஊடகத்தின் இலங்கை தொடர்பான காணொளி திரையிடப்பட்ட சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அங்கு பிரசன்னமாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten