தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 21 maart 2013

சிறிலங்காவைத் துரத்தத் தொடங்கினார் ஜோன் கெரி !!


[ புதினப்பலகை ]
சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
ஜெனிவா தீர்மானத்தை அடுத்து, வொசிங்டனில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

“ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பு, பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போர் மற்றும் உறுதியற்ற நிலையில் இருந்து, இறுதியான சமாதானத்தை அடைவதற்கான தொடர்ந்து சுபீட்சமான பாதையில் தொடர்ந்து செல்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தை ஊக்குவிக்கிறது.

இந்தத் தீர்மானம் 2012ம் ஆண்டு தீர்மானத்தைப் போன்று, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் சிறிலங்கா அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்நோக்கி நகர்த்த வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நீண்டகாலப் பிரச்சினைகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் தனது சொந்த மக்களுக்கான பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்கா, தனது அனைத்துலக பங்காளர்களுடன் இணைந்து அழைப்பு விடுத்துள்ளது.

அதேவேளை, சில முக்கியமான முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ள போதிலும், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறையவே உள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றும் என்றும், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனிதஉரிமைகள் விடயங்களில் அண்மையில் ஏற்பட்ட எதிர்மறையான நிலைமைகளில் இருந்து மீளத் திரும்பும் என்றும் நாம் எதிர்பார்க்கிறோம்.

இந்த முக்கியமான பணிகளுக்கு உதவ அமெரிக்கா தயாராகவே உள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துடன் எமது தொடர்புகள் முன்நோக்கிச் செல்வதையும், சிறிலங்கா மக்களுடன் எமது நட்புறவை வலுப்படுத்திக் கொள்வதையும் எதிர்பார்க்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்

Geen opmerkingen:

Een reactie posten