ஐ நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா மற்றுமொரு இராஜதந்திரத் தோல்வியைச் சந்தித்துள்ளதோடு அனைத்துலக அரங்கில் சிறிலங்கா தனிமைப்படுத்தப்பட்டு வருவாதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதகாலமாக ஐ.நா மனித உரிமைச் சபையில் தொடர்சியான இராஜதந்திரச் செயற்பாடுகளில் நா.தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் பங்காற்றி வந்திருந்த நிலையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் தீர்மானம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த பொழுதே ஊடக அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா தொடர்பில் ஓர் சுதந்திரமான அனைத்துலக விசாரணையே உலகத் தமிழர்களின் எதிர்பார்பாகவுள்ள நிலையில் இன்றைய தீர்மானம் அது நோக்கிய இராஜதந்திரச் செயல்வழிப்பாதையில் முக்கியமானதொரு விடயமென கருத்து வெளியிட்ட அமைச்சர் சுதன்ராஜ் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களுக்கா பாதுகாப்புக்கு ஓர் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையொன்றினை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளமையானது தமிழகத்தில் எழுந்துள்ள அழுத்தங்களை தற்காலியமாக தணிக்கின்ற ஓர் யுக்தியாக அல்லாமல் தமிழர் நலன்சார்ந்த வகையில் சிறிலங்காவுக்கு எதிரான நிலையான வெளியுறவுக் கொள்கையினை இந்தியா வகுத்துக் கொள்ளவேண்டும். இந்தியாவே சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தினைத் கொண்டுவரவேண்டுமெனவும் அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஜப்பான - தென் கொரியா போன்ற பல நாடுகள் சிறிலங்காவை கைகழுவி விட்டிருப்பமை கவனிக்க வேண்டிய விடயமாகவுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
http://news.lankasri.com/show-RUmryDRVNZmq7.html
Geen opmerkingen:
Een reactie posten