அமெரிக்கா கொண்டுவந்த இந்த தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு மறைமுக வெற்றியே கிடைத்துள்ளது. என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் மீது இந்தியா தெளிவான முடிவை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
இலங்கை தமிழர் பிரச்சினையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா நிபந்தனையின்றி ஆதரித்து இருக்கவேண்டும்.
இல்லையேல் நிபந்தனையின்றி இந்த தீர்மானத்தை எதிர்த்து இருக்கவேண்டும். அப்படி செய்து இருந்தால், உலக நாடுகளால் அது பாராட்டப்பட்டிருக்கும்.
திருத்தம் செய்யப்பட்ட அமெரிக்காவின் இந்த தீர்மானம் சரியானதே, நியாயமானதே. அது நிபந்தனையின்றி ஆதரவளிக்கக்கூடியதே.
இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்று எந்த ஒரு நாடும் கூறவில்லை.
எனவே அமெரிக்கா கொண்டுவந்த இந்த தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு மறைமுக வெற்றியே கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
http://news.lankasri.com/show-RUmryDRVNZmq5.html
Geen opmerkingen:
Een reactie posten