தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 1 maart 2013

சென்னையில் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் முகமூடி அணிந்து மாணவர்கள் போராட்டம் !


சென்னையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் உருவ முகமூடியுடன் பாடசாலை மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
மறைமலைநகரில் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் உருவம் பொறித்த முகமூடியை  500க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் அணிந்து கொண்டனர். இவர்களுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கலந்து கொண்டிருந்தார்.
இங்கு வைகோ கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் இறுதிக்கட்ட போரில் பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரனை கைது செய்த இலங்கை இராணுவத்தினர், பாலசந்திரனின் கண் எதிரேயே பாதுகாப்புக்கு இருந்த 5 விடுதலைப்புலிகளை சுட்டுக்கொன்றனர். பின்னர் பாலசந்திரனுக்கு சாப்பிடுவதற்கு பிஸ்கெட் தந்தனர். அதனை பால் வடியும் சிறுவன் பாலசந்திரன் சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது போர் மரபை மீறி, இளம் சிறுவனை துப்பாக்கியால் ஈவு இரக்கமற்ற முறையில் சுட்டுக்கொன்றனர்.
இதில் சிறுவனின் மார்பில் 5 குண்டுகள் பாய்ந்து இருந்தன. இலங்கை கொடூரர் ராஜபக்ச ஒரு பாலசந்திரனை மட்டுமே சுட்டுக்கொல்ல முடிந்தது. ஆனால் தமிழகத்தில் ஏராளமான பாலசந்திரன் உள்ளனர். இவர்களை அவன் என்ன செய்ய முடியும்?. பாலசந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகளை சனல்-4 வெட்ட வெளிச்சமாக காண்பித்த பிறகு இலங்கையின் கொடிய போர்க்குற்றம் உலக நாடுகளுக்கு வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
இங்கு பாலசந்திரன் உருவம் பொறித்த முகமூடி அணிந்து வந்த அனைத்து மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.
பாலசந்திரன் முகமூடி அணிந்த மாணவர்கள், இலங்கை அரசுக்கு எதிராகவும், ஜனாதிபதி ராஜபக்சவை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.
- See more at: http://news.lankasri.com/show-RUmryDTVNYmpy.html#sthash.OWuWcE2I.dpuf

Geen opmerkingen:

Een reactie posten