நம்பிக்கை தரும் கனடியப் பிரதமரின் உறுதியான உரையும், உறுதியில்லாத இந்திய அரசின் நிலைப்பாடும்!
உலக அரசியல் அரங்கில் அக்கறையுள்ளவர்களின் பார்வை இப்போது ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரின்பால் திரும்பியுள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது. மனித உரிமைகள் என்று வந்தாலே இலங்கையின் போர்க்குற்றம் பற்றிய கவன ஈர்ப்பே அதிக முக்கியத்துவம் பெறுவது வழமையாகிவிட்டது.
கடந்த வருட மார்ச் மாதமும் இதே மாதிரியான பரபரப்பு உலக அரங்கில் காணப்பட்டது. இலங்கை மேல் குற்றப் பிரேரணை கொண்டு வரப்படும் என்று அமெரிக்கா செல்லி வந்தபோதும், அதை எந்த நாடு கொண்டுவரும் என்ற பரபரப்பும், அது எவ்வளவு தூரம் பாரதூரமானதாக அமையும் என்பதும் கடைசி நேரம் வரை மர்மமாகவே இருந்தது.
இறுதியில் அமெரிகாவே அதை கொண்டு வந்தது. வேறு ஒரு நாட்டிடம் அதை ஒப்படைத்தால் தோற்கடிக்கப்படக் கூடிய அளவுக்கு இலங்கை அரசின் பிரச்சாரம் அன்று வலுப்பெற்றிருந்தது.
அதனால்தான் அமெரிக்க அரசு தானே அதை கையில் எடுத்தது. பலதரப்பட்ட அழுத்தம் காரணமாக தவிர்க்க முடியாத நிலையில் இந்தியாவும் இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. அதனால் பிரேரணையும் வெற்றி பெற்றது. இதுவே கடந்த வருடத்தின் நிலைமை.
இந்த வருடம் இலங்கையின் மனிதஉரிமைகள் விடயத்தில் எந்த அளவுக்கு மாற்றம் தெரிகிறதென்றால், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தானே முன்வைக்கப் போவதாக அமெரிக்கா முன்கூட்டியே அறிவித்து விட்டதுதான் இலங்கை சார்பானவர்களுக்கு நெருக்கடியை கொடுத்திருந்தது.
குற்றச்சாட்டு நகலையும் கூட்டத்தொடருக்கு முன்பாகவே அமெரிகாக வெளியிட்டுவிட்டது. இலங்கை அரசுக்கும், இந்தியாபோன்ற இலங்கையின் ஆதரவு நாடுகளுக்கும் தமது உறுதியான நிலைப்பாட்டை முன்னறிவித்தலாக விடுக்கும் விதத்திலேயே இம்முறை அமெரிக்காவின் அணுகுமுறை அமைந்திருந்தது.
கடந்த வருடம் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் போது இறுதி நேரத்தில் இந்தியா விடாப்பிடியாக நின்று செய்த திருத்தங்கள் போன்று இம்முறை இடம்பெற்று விடக் கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாக இருப்பதாக தெரிகிறது.
இலங்கை அரசு தமது சர்வாதிகாரப் போக்கில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல நாடுகளின் அரசுத் தலைவர்களாலும், பிரதானிகளாலும் விடுக்கப்படுகின்ற போதும், அவை எதையுமே இலங்கை அரசு கருத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை.
கடந்த வருடம் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட மென்போக்கிலான தீர்மானத்தைக்கூட மதித்து நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டின் வெளிப்பாடாகவே அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவளிக்கும் முடிவுக்கு மேற்குலக நாடுகள் வந்துள்ளன.
அதற்கு வலுச் சேர்க்கும் விதமாக சனல்-4 வெளியிட்டிருக்கும் பாலச்சந்திரனின் படுகொலை, மற்றும் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் போன்ற ஆதாரங்கள் அமைந்துள்ளன.
இலங்கை அரச படைகள் செய்த போர் குற்றம் சம்பந்தமாக எவ்வளவுதான் ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்ற போதும், அவை எல்லாவற்றையும் மறுத்துவரும் இலங்கை அரசு, எதைப்பற்றியும் சரிவர ஆராயாமலே எழுந்தமானத்துக்கு மறுத்து அறிக்கை விடுவதன் மூலம் தாங்கள் செய்த குற்றங்களை தாங்களே இலகுவில் வெளிக்காட்டி விடுகிறார்கள்.
அதற்கு உதாரணமாக, வடக்கில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் காணி அபகரிப்பு சம்பந்தமான போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்ற படைத்தரப்பை பிடித்து மக்கள் பொலிசாரிடம் கையளித்த போதும், அப்படி யாரும் தம்மிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று காவலதுறை பேச்சாளர் சொன்னதோடு, வெளிவந்த படங்கள் கணனி தொழில்நுட்பத்தின் மூலம் புகுத்தப்பட்டவை என்று சொல்லியிருந்தார்.
மக்கள் பிரதிநிதிகள், கல்விமானகள் முன்னிலையில் நடந்த ஒரு சம்பவத்தையே திரிவு படுத்துபவர்கள், பாலச்சந்திரனின் கொலையையா ஒத்துக்கொள்ளப் போகிறார்கள்?
மனித உரிமைகள் பேரவையில் இம்முறை இந்தியா என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு கடந்த முறையைப்போல் இம்முறையும் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இலங்கையிடம் எவ்வளவுதான் அடி வாங்கி அவமானப்பட்டாலும் முதுகைக் காட்டியே பழகிப்போய் விட்டது.
இந்தியாவுக்கு. (ராஜீவ் காந்தியை துப்பாக்கிப் பிடியால் அடித்ததை, மகிந்தவுக்கு முதுகு சொறிய வந்துள்ள சுப்பிரமணியம் சுவாமி மட்டுமல்ல, பணிந்து போகும் இந்தியாவும் மறந்து விட்டது) தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல், இந்தியாவின் எதிர்க்கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து இலங்கை அரசின் கொடூரத்துக்கு எதிராக இரு அவைகளிலும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனல், இந்தியாவின் ஜனாதிபதியும் (முன்னாள் வெளியுறவு அமைச்சரும்) இன்றைய வெளியுறவு அமைச்சரான சல்மான் குர்ஷித் அவர்களும், மக்களவை உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு சரியான முறையில் பதிலளிக்காமல், இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தபடியே, அவையினரை சமாளிக்கும் விதத்தில் உரையாற்றியிருந்தார்கள்.
கொலைகளுக்கு காரணமானவர்களிடமும், அதற்கு துணை நின்றவர்களிடமும் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்? மக்களின் உணர்வலைகள் இலங்கைக்கு எதிராக இருப்பதால், தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய ஒரு நிலையில் இலங்கைக்கு எதிரான ஒரு முடிவை இம்முறையும் இந்தியா எடுக்கக்கூடும். இலங்கைக்கு சார்பான பல நாடுகள் சபையில் இல்லாத நிலையில் இந்தியா நடுநிலை வகித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
இந்தியாவை நம்பியே நாம் சீரழிந்த போதும், கனடியத் தமிழரைப் பொறுத்தவரை பிரதமர் ஹாப்பரின் இலங்கைக்கு எதிரான பாராளுமன்ற உரைதான் எம் எல்லோருக்கும் மன ஆறுதலை தருகிறது. ஏதாவது ஒரு வகையில் ஈழத் தமிழருக்கு ஒரு விடிவு பிறக்கவேண்டுமானால் எமது பிரதமரிடம் எற்பட்டுள்ள மனத்தெளிவு ஏனைய நாட்டுத் தலைவர்களிடமும் ஏற்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு!
க.ரவீந்திரநாதன் (செந்தாமரை)
- See more at: http://news.lankasri.com/show-RUmryDTVNYmp6.html#sthash.d5rdn4fR.dpufஇறுதியில் அமெரிகாவே அதை கொண்டு வந்தது. வேறு ஒரு நாட்டிடம் அதை ஒப்படைத்தால் தோற்கடிக்கப்படக் கூடிய அளவுக்கு இலங்கை அரசின் பிரச்சாரம் அன்று வலுப்பெற்றிருந்தது.

இலங்கை தொடர்பான கனடாவின் நிலைப்பாடு மேலும் பல நாடுகளுக்கு உடன்பாட்டைக் கொடுக்க வேண்டும்!!
[ வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013, 07:51.03 AM GMT ]
எத்தனையோ வருடங்களாக ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான பிரிவினர் நடத்தி வருகின்ற மனித உரிமைகள் பற்றிய சந்திப்புக்கள் கடந்த காலங்களில் இந்தளவிற்கு முக்கியத்துவம் பெற்றிருக்குமா என்ற கேள்வியே நமக்கு முன்னாள் தோன்றி நிற்கின்றது.
உலகில் பல நாடுகளிலும் கண்டங்களிலும் மனித உரிமை மீறல்களும்; மனிதப் படுகொலைகளும் இடம்பெற்று வந்திருக்கின்றன.
ஆனால் அவை ஒரு நாடு அல்லது ஒரு இனம் சம்பந்தப்பட்டடவையாக இருந்திருக்கலாம். அதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அமர்வுகள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் கலந்துரையாடப்படும் விடயமாகவே இருந்திருக்கின்றன.
ஆனால் உலகில் எங்கோ ஒரு மூலையில் சிறிய மாங்கனி வடிவத்தில் அமைந்துள்ள அந்த சிறிய நாட்டில் ஒரு சிறுபான்மை இனத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் அடங்கிய போர்க்குற்றங்கள் தற்போது விகாரமான தோற்றத்துடன் உலகெங்கும் பேசப்படும் விடயமாக உள்ளதை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆமாம் இலங்கையை குற்றவாளிக் கூண்டில் வைத்து அதன் மீது சுமத்தப்பட்டுள்ள மனித உர்pமை மீறல்கள் அடங்கிய போர்க்குற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் ஜெனிவாவில் ஆரம்பமாகி தொடர்ந்து கொண்டிருக்க, உலகின் பல நாடுகளினதும் பாராளுமன்றங்கள் மிகவும் அமர்க்களப்படுமளவிற்கு ஆங்காங்கே விவாதங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
குறிப்பாக இந்திய பாராளுமன்றத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விவாதங்களில் இடது சாரி மற்றும் ஜெயலலிதாவை தலைவராகக் கொண்ட அண்ணா திமுக போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் ஆற்றிய உரைகள் அந்த அரங்கினுள் அமர்ந்திருந்து காங்கிரஸ் மற்றும் கருணாநிதியின் தலைமையிலான திமுக எம்பிக்களை நிச்சயம் மாற்றியிருக்காது என்பது நாம் நன்கு அறிந்த விடயமே.
ஆனாலும் உலகத் தமிழரகள்; அந்த பாராளுமன்றத்திலே இலங்கைக்கு எதிராகவும் இந்திய மத்திய அரசிற்கு எதிராகவும் ஆற்றிய உரைகளை நன்கு மதித்த வண்ணம் செவிமடுத்திருப்பார்கள்.
இந்தியா ஜெனிவாவின் மனித உரிமைகள் அமர்வில் என்ன செய்யப்போகின்றது என்ற கேள்வியை மிகவும் ஆவேசத்துடன் கேட்டார்கள் அந்த நாட்டின் நேர்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள்.
உலகம் இந்தியாவின் நியாயமான பங்களிப்பிற்காக காத்திருக்கின்றது என்பதுதான் இப்போது நிதர்சனம்.
இந்தியாவிற்கு அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டியது கனடா நாட்டின் பாராளுமன்ற அமர்வுகளைத் தான். நேற்று முன்தினம் கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள் இங்;கு வாழும் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உலகெங்கும் பரந்து வாழும் நமது உறவுகள் அனைவருக்கும் மிகவும் உற்சாகத்தை தந்த ஒன்றாகவே காணப்படுகின்றது.
நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் கனடாவின் பிரதான கட்சிகளில் ஒன்றான லிபரல் கட்சியின் தலைவர் திரு.பொப் ரே தனது கேள்வி நேரத்தின்போது, இலங்கை தொடர்பான கேள்வியொன்றை முன்வைத்தார்.
இலங்கை அரசு தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களை மேற்கொள்வதுடன், மனித உரிமை விடயத்தில் தோல்வியடைந்தும், இனங்களுக்கிடையில் நல்லிணக்கக்கத்தை உருவாக்குவது தொடர்பிலும் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருக்கும் பொதுநலவாய நாடுகளுக்கான மாநாட்டைப் புறக்கணிக்கும் கனடாவின் நிலைப்பாட்டில் கனடிய அரசு உறுதியான முடிவை எடுத்துள்ளதா என்பதையும், கூற முடியுமா என்று கடுமையான தொனியில் கேள்வியை எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த ஆளும் கொன்சவ்வேட்டிவ் கட்சியின் வெளிவிவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர், இலங்கையில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக எங்களது நிலைப்பாட்டை நாங்கள் கனடாவிலுள்ள இலங்கைத் தூதரிடமும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சரிடமும் தெரியப்படுத்தியுள்ளோம்.
கனடா தொடர்ந்தும் உலகில் இடம்பெறும் மனிதவுரிமை விவகாரங்கள் தொடர்பாக, குறிப்பாக இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என்றார்.
அதேபோல கனடிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரான புதிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த திரு.ரொம் மல்க்கெயர், 2009ம் ஆண்டு தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட மிக மோசமான படுகொலைகள் மற்றும் கொடுமைகள் தொடர்பாக தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் கேட்கப்படுவதன்படி, இலங்கை அரசு உரிய விசாரணைகளை மேற்கொள்ளத் தவறும் பட்சத்தில், கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளுக்கான மாநாட்டில் கலந்துகொள்ளாது தவிர்க்கும் விடயத்தில் கனடியப் பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பர் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பாரா? என்று வினவினார்.
இதற்குப் பதிலளித்த கனடியப் பிரதமர், இலங்கை விடயத்தில் போதிய மாற்றங்கள் வந்தால் ஒழிய, தான் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளாது புறக்கணிக்கப் போவதாக அறிவித்த விடயத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.
நான் இப்படிக் கூறிய காலத்தைவிட, தற்போது அந்நாடு இன்னும் பிழையான திசையில் இன்னும் அதிக தவறுகளைச் செய்வதை நான் கரிசனையுடன் அவதானித்து வருகிறேன் என்றும் குறிப்பிட்டமை கனடா தொடர்பான நல்ல நம்பிக்கையை நமக்குத் தந்துள்ளது.
இதேபோல நமக்கு ஏற்பட்ட நம்பிக்கைகள் வீண் போகாமல் இருக்க கனடாவைப் போன்று ஏனைய நாட்டு பாராளுமன்றங்களிலும் இலங்கைக்கு எதிரான குரல்கள் ஒலித்தால் நிச்சயம் இலங்கை அரசும் அதன் ஜனாதிபதி மகிந்தாவும் ஜெனிவாவில் மண் கவ்வும் நிகழ்வு நிச்சயம் இடம்பெறும் என்று எதிர்பார்த்து காத்திருப்போம்.
கதிரோட்டம் - கனடா உதயன்
- See more at: http://news.lankasri.com/show-RUmryDTVNYmp3.html#sthash.eRqKg5gu.dpufஉலகில் பல நாடுகளிலும் கண்டங்களிலும் மனித உரிமை மீறல்களும்; மனிதப் படுகொலைகளும் இடம்பெற்று வந்திருக்கின்றன.

Geen opmerkingen:
Een reactie posten