தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 1 maart 2013

இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் சுரேன் சுரேந்திரன் -


அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை பிரித்தானியா கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்படும் வரையில் ஓயப்போவதில்லை எனவும், தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
க்ளோபல் தமிழ் போரம் அமைப்பின் மூன்றாண்டு பூர்த்தி நிகழ்வுகளில் பிரித்தானியா ஆளும் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டமை பெருமிதம் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நோர்வேயின் முன்னாள் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://www.jvpnews.com/srilanka/16867.html

Geen opmerkingen:

Een reactie posten