இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள இராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக் கட்ட சண்டையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டனர்.
இலங்கையில் நடந்த இந்த போர்க்குற்றங்கள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிங்களர்களின் காட்டுமிராண்டித்தனமான செயலை கண்டித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கடந்த ஆண்டு அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது.
இந்தியா உள்பட பல நாடுகளின் ஆதரவுடன் இந்த தீர்மானம் வெற்றி பெற்றது. என்றாலும் அந்த தீர்மானத்தால் இலங்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
ஈழத்தமிழர்கள் தொடர்ந்து சிங்கள ராணுவத்தால் துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள். ஈழத்தமிழர்களின் வாழ் வாதாரங்கள் அழிக்கப்பட்டு தமிழர்கள் வாழ்ந்த கிராமங்களில் சிங்களர்கள் குடியேற்றப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து உலக அளவில் மீண்டும் பேச்சு எழுந்தது. தமிழர்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியானது.
இதையடுத்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் மீண்டும் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வர உள்ளது. அதில் இலங்கையில் தற்போது நடந்து வரும் சீரமைப்பு பணிகள் அனைத் தையும் ஐ.நா.சபை குழுவின் நேரடி தலைமையின் கீழ் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே இந்த தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தீர்மானத்தை வெற்றி பெறச் செய்ய அமெரிக்காவும் தோற்கடிப்பதற்காக இலங்கையும் பல்வேறு இரகசிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த தீர்மானம் மீது 21-ந் தேதி ஓட்டெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 45 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் வெற்றி பெற வேண்டுமானால் 23 நாடுகளின் ஆதரவு வேண்டும். கடந்த ஆண்டு இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்ட சீனா, ரஷ்யா உள்பட சில நாடுகள் தற்போது கவுன்சிலில் உறுப்பினர்களாக இல்லை.
எனவே இலங்கையை கட்டுப்படுத்தி விட முடியும் என்று அமெரிக்கா நினைக்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள சில கைக்கூலிகளின் உதவிகளுடன் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கை பல ரகசிய நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதில் மிகப்பெரிய கேள்விக்குறி நீடிக்கிறது. கடந்த தடவை தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பியதால் இலங்கைக்கு எதிராக உறுதியாக செயல்பட்ட இந்தியா இந்த தடவை மவுனம் சாதித்தப்படி உள்ளது.
சமீபத்தில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால் ஐ.நா.சபையில் மனித உரிமை கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள பல நாடுகள் இலங்கைக்கு எதிராக முடிவு எடுக்கும் நிலையில் உள்ளன.
நேற்று ஐ.நா.சபையில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆவணப்படம் வெளியானதால் இலங்கைக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
இலங்கையை காப்பாற்ற சில நாடுகள் முயன்று வரும் நிலையில் சமீபத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி பேட்டி கொடுக்கும் போது, இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று கூறியிருந்தார்.
ஆனால் சமீபத்தில் பாராளுமன்றத்தில் இது தொடர்பான சிறப்பு விவாதம் நடந்தபோது, மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிட மறுத்து விட்டது.
இந்த நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த மத்திய மந்திரி நாராயணசாமி, ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானம் மீதான விஷயத்தில் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார். அவரது பேட்டி வருமாறு:-
இலங்கை பிரச்சினையை மத்திய அரசு மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருகிறது. அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் பற்றிய முழுவ விவரங்கள் தெரியவில்லை. இதனால் மத்திய அரசு முடிவு செய்யவில்லை. அது பற்றிய முழு விவரமும் தெரியவந்த பின்னர் மத்திய அரசு சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கும். கடந்த முறை எந்த நிலைப்பாட்டை (தீர்மானத்தின் ஆதரவு) கொண்டு இருந்ததோ அதையே இந்த முறையும் பின்பற்றப்படும்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
- See more at: http://news.lankasri.com/show-RUmryDTWNYmt4.html#sthash.et5kjKlB.dpufஇந்தியா உள்பட பல நாடுகளின் ஆதரவுடன் இந்த தீர்மானம் வெற்றி பெற்றது. என்றாலும் அந்த தீர்மானத்தால் இலங்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

Geen opmerkingen:
Een reactie posten