தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 maart 2013

தமிழகத்தின் எதிர்ப்பின் மத்தியிலும் இலங்கைக்கான இந்தியாவின் உதவி அதிகரிப்பு


மனித உரிமைகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ள போதிலும், இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கான தமது உதவிகளை அதிகரித்துள்ளது.
இந்த முறை இந்தியாவின் வரவு செலவுத்திட்டத்தில் இலங்கைக்கான மானியத் தொகை 500 கோடி இந்தி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இந்த தொகை 290 கோடியாக இருந்ததுடன், 2011-2012 காலப்பகுதியில் இது 182 கோடிகளாக காணப்பட்டது.
இந்தியாவின் இந்த மானியத் தொகை, இலங்கையில் உள்ள தமிழர்களின் புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும் இது வேறு காரணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தின் அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
- See more at: http://news.lankasri.com/show-RUmryDTWNYmt2.html#sthash.g2GiiMwl.dpuf

Geen opmerkingen:

Een reactie posten