தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 maart 2013

''இலங்கைக்கு ஆதரவான நிலையையே இந்தியா எடுக்கும்!'' - இரகசியம் சொல்லும் டக்ளஸ்!


விடுதலைப்புலிகள் அமைப்பின்  தலைவர் பிரபாகர​னின் இளைய மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்ட காட்சிகள் உலகையே உலுக்கிக்கொண்டு இருந்த வேளையில், நம் ஊர் தமிழர்கள் கச்சதீவை நோக்கி அணிதிரண்டனர்.
கடந்த மூன்று ஆண்டு​களாக கச்சத்தீவு புனித அந்தோணி​யார் கோயில் திருவிழா, இலங்கை அரசின் அனுமதியுடன் நடந்து​ வருகி​றது.
இந்த ஆண்டுக்கான திரு​விழா பெப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடந்தது. அந்தத் திருவிழாவில் பங்கேற்ற இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பேசி​னோம்.
கேள்வி:  போர் முடிந்து விட்டது என்றாலும் இலங்கையில் இப்போதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் குறைந்துவிடவில்லையே?
பதில்:  இலங்கையில் உள்ள சில தமிழர் கட்சிகள், பத்திரிகைகள் தவறான செய்திகளையே வெளியிடுகின்றன. சமூகம் என்றால் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். தமிழகத்தில் நடக்கும் கொலை, வன்முறை சம்பவங்கள்கூட இலங்கையில் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழர்களுக்கு எந்தப் பிரச்னையும் நடக்க​வில்லை. எங்கள் மக்கள் சந்தோஷமாகத்தான் வாழுறோம். அதற்கு நாங்​களே சாட்சி. சமாதானம் இல்லை என்றால், நாங்கள் எப்படி இங்கே வர முடியும்?
கேள்வி :  ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு​வரப்படும் தீர்மானம் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:   தீர்மானம் வந்த பின்தான், அதுபற்றி பேச முடியும். கொண்டு ​வரப்படும் தீர்மானத்தில் உண்மை இருக்குமானால், அவை குறிப்பிடும் தவறுகளை திருத்திக் ​கொள்வோம். எங்களைப் பொறுத்தமட்டில் எங்கள் பிரச்னையை நாங்களேதான் தீர்த்துக் கொள்ள முடியும். இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் பிரசவ காலத்தில் உதவும் மருத்துவரின் வேலையை மட்டுமே செய்ய வேண்டும்.
கேள்வி:  இந்திய அரசு கொடுக்கும் உதவிகள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு முழுமையாகக் கிடைப்பதுகூட இல்லையே?
பதில்:  இது தவறான தகவல். இந்திய அரசு கொடுக்கும் உதவிகள் அனைத்தும் தமிழர்களுக்கே வழங்கப்படுகிறது. அதற்குச் சாட்சியாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் இருக்கி​றார். அதிலும் நம்பிக்கை இல்லை என்​றால், உங்களை நேரில் அழைத்துச் சென்று காட்டு​கிறேன்.
கேள்வி:  கிளிநொச்சி, வவுனியா போன்ற தமிழர் பகுதிகளில் சிங்களவர்களின் கட்டாயக் குடியேற்றம் நடப்பதாகவும், பூநகரியில் 6,000 தமிழ் குடும்பங்களுக்கு மத்தியில் 31 ஆயிரம் இராணுவத்தினர் குடியமர்த்தப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறதே?
பதில்:   பயங்கரவாதிகளுக்கு எதிராக இலங்கை அரசு ஒரு போரை நடத்தி முடித்திருக்கிறது. அதற்கு நாங்களும் ஒரு காரண​மாக இருந்திருக்கிறோம். போருக்குப் பின் தேவையான பாது​காப்பு கருதியே அரசு அந்த நடவடிக்​கையை மேற்கொண்டு இருக்கிறது. அல்லாமல், தமிழர்களை அச்சுறுத்​துவதற்காக அல்ல. தமிழர்கள் மகிழ்ச்சியுடனே இலங்கையில் வாழ்கிறோம்.
கேள்வி: தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் 'தமிழர்​களுக்கு சம உரிமையே கிடையாது’ என ராஜபக்ஷே பேசியிருக்கிறாரே?
பதில்:   அந்த செய்தி தவறானது. ஜனாதிபதி அப்படிப் பேசவே இல்லை.
கேள்வி:  சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்​பட்ட விதம் குறித்து வெளியான செய்திக்கு உடனடியாக மறுப்பு வெளியிட்ட இலங்கை அரசு, ஜனாதிபதி அப்படிப் பேசவில்லை என ஏன் மறுக்கவில்லை?
தில்:   அந்தச் செய்தி இங்கு வர​வில்லை (உலகம் முழுதும் வெளி​​யான செய்தி இலங்கையில் மட்​​டும் வெளியாகவில்லையாம்!). பாலச்சந்திரன் கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவ​டிக்கை எடுக்கக் கூறும் நீங்கள், புலிகள் நடத்திய தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க ஏன் வலியுறுத்த​வில்லை?''
கேள்வி:  புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்​டார்கள் என அறிவித்துவிட்டீர்கள். அப்படி இருக்கையில், இப்போது யார் மீது நடவடிக்கை எடுக்க முடியும்?
பதில்:   'புலிகள் இயக்கம் அழிந்தாலும் அவர்களது கொள்கைகள் இன்னும் உயிருடன்தான் இருக்கி​றது. உதாரணத்​துக்கு தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னும் அவரது கொள்கைகள் எப்படி நிலைத்திருக்கிறதோ... அதேபோல் இலங்கையிலும் புலிகளின் கொள்கை​கள் நிலைத்திருக்கிறது. அதனை தமிழர் கட்சிகள் சில கடைப்​பிடித்து வருகின்றன.
கேள்வி:  இந்திய மீனவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். அதற்கு உங்களது பதில் என்ன?
பதில்:  இந்திய மீனவர்கள் இலங்​கைக் கடற்பகுதிக்குள் வந்து தடை​செய்யப்பட்ட 'ரோலர் மடி வலை’களை வைத்து மீன்பிடித்துச் செல்வதால், இலங்கை மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இலங்கை மீனவர்களின் வலைகளையும் சேதப்படுத்தி​விடுகின்​றனர். இதனால் இலங்கைக் கடற்பகுதியிலே மீன்வளம் முற்றிலுமாக அழிந்து​விடும். எங்கள் தரப்பில் பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழக மீனவர்கள் குறித்து தமிழக அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்.
கேள்வி:  ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் எனச் சொல்லப்படுகிறதே?
பதில்:  ஏற்கெனவே இலங்கை மீது கொண்டுவரப்பட்ட தீர்​மானத்தை எதிர்க்க இருப்பதாக இந்தியா சொன்​னது. ஆனால், கடைசி நேரத்தில் ஆதரித்து வாக்க​ளித்தது. அதேபோல், இப்போது தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாகச் சொல்லி இருக்கிறது. ஆனால், கடைசி நேரத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையையே இந்தியா எடுக்கும்.
ஜூனியர் விகடன்
- See more at: http://news.lankasri.com/show-RUmryDTWNYmt6.html#sthash.zqpRWoKG.dpuf

Geen opmerkingen:

Een reactie posten