அமெரிக்க தீர்மானத்தின் போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள், இலங்கையின் முன்னேற்றத்தை அவதானித்தே வாக்களித்துள்ளன என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின்போது 13 நாடுகள் எதிராக வாக்களித்தமையும் 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கெடுக்காமல் இருந்தமையையும் கொண்டு 47 நாடுகளில் 22 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வெளியிட்டதாகவே கருதவேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இரண்டாக பிளவுப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten