தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 maart 2013

யுத்தம் எப்படி செய்யப்பட்டது என்பது எனக்கு தெரியும்! சர்வதேச விசாரணைக்கு அஞ்சக்கூடாது! சரத் பொன்சேகா !


இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக ஐநா சுமத்தியுள்ள குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு இலங்கை அஞ்சக்கூடாது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணைக்கான அழுத்தங்கள் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படையில் பொறுப்பு கூறலை புறக்கணிக்க முடியாது என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
தன்னிடம் யாராவது கேள்வி கேட்டால் அதற்கு பதிலளிக்க தயார் எனவும் சர்வதேச விதிகள் மற்றும் மரபுகளுக்கு அமையவே யுத்தம் மேற்கொள்ளப்பட்டதெனவும் ஆனால் இன்னும் கேள்வி நிலவுவதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
யுத்தம் குறித்து சிப்பாய்கள் குறித்து யாராவது கேள்வி எழுப்பினால் அதற்கு பதிலளிக்க கூடிய வகையில் அரசாங்கமும் இராணுவத் தலைவர்களும் இருக்க வேண்டும் என சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
சில விடயங்களை புறக்கணிக்க முயற்சிக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை. எம்மால் பதிலளிக்க முடியும். ஆனால் அரசாங்கம் அதனை செய்வதில்லை. எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனக்கு நம்பிக்கை உள்ளது.
யுத்தம் எப்படி செய்யப்பட்டது என்று எனக்கு தெரியும்´ என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten