அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மாணத்தில் உள்ள சில கடுமையான நடவடிக்கைகளை களையுமாறு இந்தியா அமெரிக்காவை கோரியுள்ளது. உதாரணமாக இலங்கையில் நடைபெற்ற கொலைகளுக்கு சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று அப்பிரேரணையில் முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் உறுப்பு நாடு என்ற வகையில் இந்தியா கொடுத்த அழுத்தத்தினால் தற்போது இவ்விடையம் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் மேலும் அறியப்படுகிறது. இதில் நாம் ஒரு விடையத்தை கவனிக்கவேண்டும். இன்று மதியம் 12.00 மணியோடு மாற்றங்கள் செய்வதற்கான கால எல்லை முடிவடைகிறது. இதுவரை அமெரிக்க தீர்மாணத்தில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்று வேறு எந்த நாடும் கோரிக்கை விடுக்கவில்லை. ஆனால் இந்தியாவே தொடர்ந்து அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. எனவே இந்தியாவுக்கு தமிழர்கள் அழுத்தம் கொடுக்கவேண்டும்.
தற்போது லண்டனில் இந்திய தூதரகத்துக்கு முன்னர் , இளையோர்கள் உண்ணாவிரதம் இருப்பதுபோல அனைத்து நாடுகளிலும் ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதம் இருந்து இந்தியாவுக்கான அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும். இங்கே அமெரிக்க பிரேரணையை எரிப்பதால் தமிழர்களுக்கு எவ்வித பயனும் ஏற்படப்போவது இல்லை. அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையை யார் (வீரியத்தை இழக்கச் செய்கிறார்களோ) அவர்களைத் தான் நாம் குறிவைக்கவேண்டும். இதனை தமிழர்கள் நன்கு விளங்கிக்கொள்வது அவசியம் ஆகும். இந்தியாவே இலங்கையை காப்பாற்ற மேலும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten