இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் பல சோடா வகைகளில் (உதாரணம் நெக்டோ) காணப்படும் மூடிகள் கறள் பிடித்து காணப்படுவதாக சுகாதார மையம் தெரிவித்துள்ளது, மற்றும் பாவிக்கப்பட்ட போத்தல்களை மீண்டும் வாவிப்பது சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ள குறிப்பிட்ட மையம், இவை பாதுகாப்பான முறையில் தான் தயாரிக்கப்படுகிறதா என்ற அச்சங்களும் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. லண்டன் ரூற்றிங்கில் உள்ள கடை ஒன்றினுள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இலங்கை சோடா பாட்டிலில் உள்ள மூடிகள் கறள் பிடித்து(துருபிடித்து) காணப்பட்டுள்ளது. இதனைச் சோதனையிட்ட அதிகாரிகள், குறிப்பிட்ட அச் சோடாவை விற்க்க தடைவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். (ஆதாரம் இணைப்பு)
இப்படியான இலங்கை அரசின் தரம் கெட்ட உணவுப் பண்டங்களை ஈழத் தமிழர்கள் தவிர்ப்பது நல்லது. இதனால் இலங்கை அரசானது பெரும் லாபத்தை ஈட்டி வருகிறது. இதனை விடுத்து தமிழர்களால் தமிழர்களுக்கு என்று நடாத்தப்படும் பல கம்பெனிகள் தமது பொருட்களை விற்பனைசெய்து வருகிறார்கள். இவ்வாறு தயாரிக்கப்படும் உணவுகளை ஈழத் தமிழர்கள் வாங்குவது நல்லது. குறிப்பான நிரு பிரான்ட், திருமகள், கலைமகள், சூரியா, மாதங்கி, ஷங்கர், என்று பல தமிழர் உணவுப் பொருட்கள் கடைகளில் கிடைக்கிறது. இந்த பிரண்டை தமிழர்கள் உபயோகிக்கலாமே.
Geen opmerkingen:
Een reactie posten