சர்வதேச சமூகத்தின் மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெறலாம் என்ற நம்பிக்கை வீணானது ????????
இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வரைவு தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றத்தைத்தான் தந்துள்ளது. உப்பு சப்பில்லாத இந்த தீர்மானத்தினால் இலங்கை தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை
இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்தவரையில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு முரணாகவோ அதை மீறிச் செல்வதாகவோ அமெரிக்காவின் முடிவு இருக்காது. அதுவே சர்வதேச சமூகத்தின் செயற்பாட்டு எல்லை எனலாம்.
இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் நலன் இரண்டு விடயங்களினால் தீர்மானிக்கப்படுகின்றது. இனப்பிரச்சினைக்கு காணப்படும் தீர்வு இந்திய மாநிலங்கள் கூடுதலான அதிகாரங்களைக் கோரிக் கிளர்ச்சி செய்யும் நிலையையோ வட, கிழக்கு மாநிலங்களின் பிரிவினைக் கோரிக்கை வலுவடையும் நிலையையோ தோற்றுவிக்காதிருக்க வேண்டும் என்பது ஒரு விடயம். இந்திய உற்பத்திகளுக்கான இலங்கைச் சந்தை வாய்ப்பு பங்கமடையாதிருக்க வேண்டும் என்பது மற்றைய விடயம். இன்றைய நிலையில் இந்தியா முக்கியமானதாகக் கருதும் இந்தத் தேசிய நலனின் அடிப்படையிலேயே இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான அதன் அணுகுமுறையைத் தீர்மானிக்கின்றது. இதனாலேயே பதின் மூன்று பிளஸ் என்பதற்கு அப்பால் செல்லத் தயங்குகின்றது.
சர்வதேச சமூகத்தின் அழுத்தத்துக்கு இலங்கை அரசாங்கம் பணிந்து போகுமா என்பது ஒரு பிரதானமான கேள்வி. அண்மைக் காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்துக்கு இலங்கை பணியப் போவதில்லை என்பதற்கான உதாரணங்களாக இருக்கின்றன. சிராணி பண்டாரநாயக்காவின் பதவி நீக்கம் பிந்திய உதாரணம். தனக்குப் பல நாடுகளில் எதிர்ப்பு உள்ள போதிலும் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவில் கூறியதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
தமிழ்த் தலைவர்களின் கடுங்கோட்பாட்டுச் செயற்பாடுகளும் பிரசாரமும் சிங்கள அரசியல் வழிச் சமூகத்தில் ஆழமான சந்தேகங்களையும் அதிருப்தியையும் தோற்றுவித்திருப்பதால் சர்வஜன வாக்கெடுப்பில் சிங்கள மக்களின் ஆதரவு சந்தேகத்துக்கு இடமானதாகவே உள்ளது. மேலும், இலங்கைக்கு எதிரானதென உள்ளூரில் பரப்புரை செய்யப்படும் செயற்பாடுகளை மேற்கொண்டதால் சர்வதேச சமூகத்தின் மீது பெரும்பாலான சிங்கள மக்கள் வெறுப்புற்றவர்களாக இருக்கும் நிலையில் சர்வதேச சமூகத்தின் பரிந்துரைகளுக்கு அம்மக்களின் ஆதரவு கிடைப்பது சந்தேகமானதே.
சர்வதேச சமூகத்தின் மூலம் தீர்வைப் பெறுவதில் தமிழ்த் தலைமைக்கு உண்மையான நம்பிக்கை இருந்திருந்தால், மேற்கூறிய நிலைமையைக் கவனத்தில் எடுத்துச் சிங்கள மக்களின் ஆதரவை வென்றெடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். கூட்டமைப்புத் தலைவர்கள் அதைச் செய்யவில்லை.
மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்துக்குப் பணியும் நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை. எனினும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் இலங்கை அரசாங்கம் நெகிழ்வு நிலையை மேற்கொள்வதாக ஒரு வாதத்துக்காக வைத்துக்கொண்டாலும் அரசியல் தீர்வுக்கான சர்வதேச சமூகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குச் சாதகமான சூழ்நிலை இப்போது இலங்கையில் இருக்கின்றதெனக் கூற முடியாது.
மேலே கூறியவற்றின் அடிப்படையில் பார்க்கையில் சர்வதேச சமூகத்தின் மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெறலாம் என்ற நம்பிக்கை வீணானது என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது. இந்த நம்பிக்கை இனப் பிரச்சினையின் தீர்வு நிரந்தரமாகப் பின்தள்ளிப் போவதற்கே வழிவகுக்கும். சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்துப் பதின்மூன்றாவது திருத்தத்தை நிராகரிப்பது தமிழ் மக்கள் உள்ளதையும் கோட்டை விட்டு அரசியல் தீர்வும் இல்லாமல் கையேந்தி நிற்கும் நிலையைத் தோற்றுவித்துவிடும்.
—இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வரைவு தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றத்தைத்தான் தந்துள்ளது. உப்பு சப்பில்லாத இந்த தீர்மானத்தினால் இலங்கை தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை

Geen opmerkingen:
Een reactie posten