இன்று காலை மாவட்டத்தின் இராணுவத் தலமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை இராணுவத் தலைமையலுவலகத்தில் கடமையாற்றும் பிரிகேடியர் தரத்திலான அதிகாரி இரத்தினசிங்கம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு புதிய அணியின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டதுடன், சிறப்புரையொன்றினையும் ஆற்றியிருந்தார்.
இதில் இராணுவத்தில் இணையும் தமிழ் யுவதிகளுக்கு, 10லட்சம் ரூபா பெறுமதியான வீடுகளும், பெறுமதியான மோட்டார் சைக்கிள்களும் வழங்கப்படும் என கூறியதுடன், இலங்கை இராணுவத்திலுள்ள ஏனையவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் இவர்களுக்கும் வழங்கப்படும் என கூறினார்.
மேலும் தமது பிள்ளைகளை பெற்றோரே முன்வந்து இராணுவத்தில் இணைத்தமை இலங்கையிலுள்ள சில அரசியல்வாதிகளுக்கும், இலங்கைக்கு எதிராகச் செயற்படும் வெளிநாடுகளுக்கும் முகத்தில் அறைந்ததற்குச் சமம் எனக் கூறியதுடன், வடக்கில் ஏனைய மாவட்டங்களிலிருந்தும் இராணுவத்தில் தமிழ் யுவதிகளை படையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கையினை பாதுகாப்பு அமைச்சு மேற்கொள்ளும் என குறிப்பிட்டார்.
மேலும் இந்த அணிவகுப்பை தொடர்ந்து பயிற்சி முடித்துக் கொண்ட தமிழ் யுவதிகளுக்கு மோட்டார் சைக்கிள்களும் வழங்கப்பட்டன.
இதேபோல் இந்த நிகழ்வுக்காக, மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் பெருமளவு மக்கள் படையினரால் வாகனங்களில் ஏற்றிவரப்பட்டதுடன், இலங்கையின் சகல பாகங்களிலிருந்தும் ஊடகவியலாளர்களும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இதேவேளை 4 மாத பயிற்சி முடித்ததாக இராணுவம் குறிப்பிடும் தமிழ் யுவதிகள் படையணி அணிவகுப்பு மரியாதை செலுத்தும்போதே 4ற்கும் மேற்பட்ட தமிழ் இராணுவ பெண்கள் மயக்கமுற்று நிலத்தில் வீழ்ந்தனர்.
குறித்த அணிவகுப்பு 20 நிமிடமே நடந்தமை இங்கு விசேடமாக குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பயிற்சி நிறைவு நிகழ்வு மக்களை கவருவதற்காக ஏனைய யுவதிகளும் இராணுவத்தில் இணைவதற்காகவே நடத்தப்பட்டது.
மேலும் இலங்கையில் இராணுவத்தில் இணைபவர்களுக்கு சகலவசதிகளுடனும் கூடிய வீடுகளும், மோட்டார் சைக்கிள்களும் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/show-RUmryDRVNZmry.html
Geen opmerkingen:
Een reactie posten