தமிழரை இனபப்டுகொலை செய்திருக்கும் இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவது என்பது இந்தியாவின் ஜனநாயகத்துக்கே அவமானம் என்று அதிமுக எம்.பி. தம்பித்துரை தெரிவித்துள்ளார்.
இந்திய பாராளுமன்றின் மக்களவையில் இன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான சிறப்பு விவாதத்தின் போது பேசியபோதே அதிமுக எம்.பி. தம்பித்துரை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் 60 ஆண்டுகளாக தமிழர் துயரத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் நிகழ்த்தப்பட்டது ஒரு இன அழிப்பு நடவடிக்கை.தமிழக சட்டசபையில் இலங்கை தமிழர் பிரச்சனை தீர்க்கப்படும் வரை அந்நாடு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அதை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இலங்கை இறுதிப் போரில் 3 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இலங்கை விவகாரத்தில் இந்தியா மௌனமாக இருந்தாலும் இதர நாடுகள் கையில் எடுத்திருக்கின்றன. இலங்கை விவகாரத்தில் இந்தியா அசட்டையாக இருக்கிறது.
இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு இருக்கிறது. இந்திய அரசின் நிலை என்ன? கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது. அப்படி நடத்துவது இந்தியாவின் ஜனநாயகத்துக்கு அவமானம்.
இலங்கை அண்டை நாடு என்பதாலேயே மௌனமாக இருந்து விட முடியாது? தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்காக மகாத்மா காந்தி போராடினார்.
அவர் பிறந்த தேசம் அண்டை நாட்டிலேயே இருக்கின்ற தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியாதா?
1999ம் ஆண்டு முதல் அதிகாரத்தில் இருந்து வருகிறது திமுக. பாஜகவோ காங்கிரஸோ இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் தொடர்ந்து இருக்கவில்லை. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என கேள்வியெழுப்பிய அவர், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மேலும் குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten