தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 4 maart 2013

மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான முயற்சிகளை வரவேற்கின்றோம்: அமெரிக்க தூதர் எலீன்


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான முயற்சிகளை வரவேற்கின்றோம் என அமெரிக்க தூதர் Eileen Chamberlain Donahoe ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில் நேற்று முன் தினம் தெரிவித்துள்ளார்.
மோதல்கள் நிறைவடைந்ததன் பின் நீதியினூடாக நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதலை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். இதற்காக இலங்கையினால் தயாரிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அமுல்ப்படுத்தவேண்டியது அவசியம்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான முயற்சிகளை வரவேற்கின்றோம். இந்தப் பிரச்சினைகளுக்கான உண்மையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமை, மற்றும் நீதி, மற்றும் சட்ட ஆட்சியின் சுயாதீனத்தைக் குறைக்கும் வகையில் அண்மையில் நடைபெற்ற முயற்சிகள் தொடர்பில் உயர்ஸ்தானிகரின் கருத்தை நாங்களும் ஆமோதிக்கின்றோம்.
நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி, மற்றும் பொறுப்புக் கூறுதல் ஆகியவற்றில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கூறும் வகையில் இலங்கைக்கு உதவ ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையுடன் நாங்கள் துணைநிற்க தயாராக இருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
http://news.lankasri.com/show-RUmryDTXNYlp5.html


Geen opmerkingen:

Een reactie posten