தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 5 maart 2013

கற்றுக்கொண்ட பாடங்கள் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தமிழ்க்கூட்டமைப்பின் ஒத்துழைப்பு தேவை!– அரசாங்கம் !


கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பு தேவை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு இதுவரை ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கிடையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Geen opmerkingen:

Een reactie posten