தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 maart 2013

பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டதன் எதிரொலி: தமிழக மீனவர்களை வாளால் வெட்டிய இலங்கை கடற்படையினர்!


தமிழகத்திற்கான விஜயங்களை தவிர்த்துக்கொள்ளவும்!- கோத்தபாய ராஜபக்ச
இலங்கையர்கள் தமிழகத்திற்கான விஜயங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இலங்கையர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதனால் அங்கு செல்வதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்திய பாதுகாப்புத் தரப்பினர் இலங்கையர்களுக்கு போதியளவு பாதுகாப்பை வழங்கத் தவறியுள்ளனர். மத வழிபாடு மற்றும் யாத்திரைகளில் ஈடுபடும் பக்தர்கள் தமிழக விமான நிலையங்களை தவிர்த்து பயணத்தைத் தொடர முடியும்.
இலங்கையர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அரசாங்கம் என்ற ரீதியில் அதற்கு பொறுப்பு சொல்ல நேரிடும்.
இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் இந்தியா எவ்வித உறுதிமொழிகளையும் அளிக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
http://news.lankasri.com/show-RUmryDRUNZnq6.html

சென்னை ரயில் நிலையத்தில் தாக்குதலுக்குள்ளான பௌத்த பிக்கு நாடு திரும்பினார்
[ புதன்கிழமை, 20 மார்ச் 2013, 03:04.02 AM GMT ]
சென்னையில்  ரயில் நிலையத்தில் வைத்து தமிழ் உணர்வாளர்களால் தாக்குதலுக்கு உள்ளான வடுபொல வங்கீச தேரர் நேற்று மாலை நாடு திரும்பினார்.
அவரை அழைத்து வருவதற்கு பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திற்கு சென்றனர்.
இலங்கை வந்த பௌத்த பிக்கு, தம்மை தாக்கியவர்களின் நோக்கம் குறித்த இவ்வாறு விளக்கமளித்தார்.
தமது உடலில் சிராய்ப்புகளோ, காயங்களோ உள்காயங்களோ ஏற்படவில்லை. இலங்கை தேரர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் உலகிற்கு காட்டவேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருந்தது.
எனது சம்பவத்திற்கு பின்னர் புத்தகாயாவுக்கு செல்லும் இலங்கை யாத்திரிகர்கள் வானூர்தி தளத்தில் இருந்து சென்னை மாபோதிக்கும் அங்கிருந்து ஏனைய யாத்திரை தளங்களுக்கும் கொண்டுச் செல்லப்படுவார்கள்.
இதன்போது அவர்களுக்கு அதிக பாதுகாப்பு தரவேண்டியது அவசியமாகின்றது. எனவே தமிழக அரசும், இலங்கையும் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

http://news.lankasri.com/show-RUmryDRUNZnr0.html

பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டதன் எதிரொலி: தமிழக மீனவர்களை வாளால் வெட்டிய இலங்கை கடற்படையினர்!
[ புதன்கிழமை, 20 மார்ச் 2013, 04:09.45 AM GMT ]
தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இன்று அதிகாலை இலங்கைக் கடற்படையினர் வாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் நாகபட்டினத்தைச் சேர்ந்த கோடியக்கரை தென் கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து சென்ற இலங்கைக் கடற்படையினர், மீனவர்களின் படகை வழிமறித்து, அவர்கள் வைத்திருந்த வாளால் சரமாரியாக வெட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதல் சம்பவத்தில் கண்ணையன், செல்வக்குமார், பொன்னுசாமி, சசிகுமார் ஆகிய மீனவர்களுகு்கு கை, கால் தொடை பகுதியில் பலத்த காயங்கள ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பிறகும் சிங்கள கடற்படை அட்டூழியம் அடங்கவில்லை.அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், வலைகளையும் பறித்து கொண்டு சென்று விட்டனர்.
இலங்கைக் கடற்படை சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் படகும் சேதம் அடைந்தது. அரிவாள் வெட்டில் காயம் அடைந்த 4 மீனவர்கள் ஏனைய மீனவர்களின் துணையுடன் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்தனர்.
பின்னர் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த வெட்டு காயம் அடைந்த மீனவர்கள் கண்ணையன், பொன்னுசாமி, சசிகுமார் ஆகியோர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாகை மீனவர்கள் மீது சிங்கள கடற்படையின் தாக்குதல் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் நாகை மீனவ கிராமங்களில் பதட்டம் நிலவுகிறது. சிங்கள கடற்படை அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தூத்துக்குடி மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றனர். தற்போது நாகை மீனவர்களை சிங்கள கடற்படை அரிவாளால் வெட்டிய சம்பவம் நடைபெற்று உள்ளது.

http://news.lankasri.com/show-RUmryDRUNZnr5.html

Geen opmerkingen:

Een reactie posten