தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 maart 2013

யாழில் இராணுவத்தின் ஏற்பாட்டில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!- நவி.பிள்ளையின் உருவப் பொம்மை எரிப்பு


யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் ஏற்பாட்டில்  அமெரிக்காவிற்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றுள்ளது.
இந்த பேரணியில் யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் இராணுவத்தினர், சிவில் உடையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதோடு அமெரிக்கா, இந்திய மேற்கு நாடுகளுக்கு எதிராக கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியால், யாழில் முக்கிய போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் உருவப் பெம்மையும் இராணுவத்தால் எரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்பாட்டப் பேரணயில் கலந்துகொள்ளுமாறு படையினரால் முன்னாள் போராளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் போராளிகள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்ததோடு கலந்துகொள்ள முடியாதவர்களிடம் குடும்பத்தில் யாராவது ஒருவர் கலந்துகொள்ள வேண்டும் என்று படையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இந்த போராட்டத்தில் சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமாக அங்கஜன் இராமநாதன், முன்னாள் ஊடகப் பேச்சாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் நேரடிக்கண்காணிப்பில் உள்ள அரச தொலைக்காட்சியான டான் தொலைக்காட்சின் செய்தி முகாமையாளருமான தயா மாஸ்ரர் மற்றும் ஈபிடிபியின் எனப்ப லரும் கலந்து கொண்டனர்.
யாழ்.மக்களை வலுக்கட்டயமாக அழைத்து அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வைக்கப்பட்டனர்
ஈபிடிபி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்பாட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கைக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்க முற்படுவதை எதிர்த்தும் ஆர்பாட்டக்கரர்கள் கோசங்களை எழுப்பியிருந்தனர்.
பொதுமக்களை வலுக்கட்டயமாக அழைத்து வந்து யாழ். கோட்டை முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது, முனியப்பர் வீதியூடாக வைத்திசாலை வீதி, மணிக்கூட்டு கோபுர வீதி, ஸ்டான்லி வீதி, கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதிகள் ஊடாக பயணித்து பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

http://news.lankasri.com/show-RUmryDRUNZnr6.html

Geen opmerkingen:

Een reactie posten