தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 maart 2013

அமெரிக்க பிரேரணையை இந்திய வலுவுள்ளதாக்கவேண்டும் - சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்


இந்தியாவுடன் பேசாது அமெரிக்கா பிரேரணையை சமர்ப்பிக்காது!- ராஜித சேனாரட்ன
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது அமெரிக்கா தமது பிரேரணையை தாக்கல் செய்யாது என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருந்தாலும், அது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவோ அல்லது அவர்களின் மீள் உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவாகவோ அமையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கைக்கு எதிராக செயற்படுகிறது என்று கூற முடியாது. ஏற்கனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கு இந்தியாவே முழு உதவிகளையும் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியா இந்த பிரேரணை தொடர்பான நிலைப்பாட்டை தமக்கு ஏற்படுகின்ற அழுத்தங்களின் அடிப்படையிலேயே எடுக்கும் என்றும் ராஜித குறிப்பிட்டுள்ளார்
http://news.lankasri.com/show-RUmryDRUNZnq5.html


அமெரிக்காவின் பிரேரணையில் இந்தியா சீர்த்திருத்தங்களை கோர வேண்டும் என்று, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
அதன் தென்னாசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் பிரேரணை தற்போது வலுவற்றதாக உள்ளது.
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான திருத்தை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இந்த விடயத்தில் இந்தியா பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியாவினாலேயே தற்போது இந்த பிரேரணை பலவீனமாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten