தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 17 maart 2013

பொதுநலவாய மாநாட்டை கனடா பகிஸ்கரிக்காது! எனினும் கனேடிய பிரதமர் பங்கேற்கமாட்டார்: விசேட பிரதிநிதி ஹுக் சேகல்


இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள பொதுநலவாய தலைவர்களின் அமர்வை கனடா பகிஸ்கரிக்காது என்று  கனடாவின் பொதுநலவாய நாடுகளுக்கான விசேட பிரதிநிதி ஹுக் சேகல் (Hugh Segal) தெரிவித்துள்ளார்.
சேகல், நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்தநிலையில் லண்டனில் வைத்து அவரை இலங்கையின் ஆங்கில பத்திரிகையின் செய்தியாளர் நேர்காணல் நடத்தியுள்ளார்.
இதன்போது கருத்துரைத்துள்ள செனட்டர் சேகல், தாம் இலங்கைக்கு உண்மையை கண்டறியும் நோக்குடன் பயணம் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய அமர்வை கனடா பகிஸ்கரிக்காது. எனினும் அதில் கனடாவின் பிரதமர் ஹாப்பர் பங்கேற்கமாட்டார் என்று சேகல் தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு பேர்த்தில் நடைபெற்ற பொதுநலவாய அமர்வின் போது, இலங்கையில் 2009ம் ஆண்டு போரின் போது இரண்டு தரப்பாலும் போர்க்குற்றம் நிகழ்ந்ததாக சர்வதேச நிபுணர்களின் அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.
இதன் அடிப்படையிலேயே ஹாப்பர் இலங்கைக்கு செல்லப்போவதில்லை என்று தீர்மானித்துள்ளதாக சேகல் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு தாம் திறந்த மனதுடன் செல்வதாக  குறிப்பிட்டுள்ள சேகல், சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் நண்பனாகவே தாம் அங்கு செல்வதாக கூறியுள்ளார்.
இதன்படி இலங்கையின் உண்மை நிலவர அறிக்கையை கனேடிய அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரலில் லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் நடவடிக்கைக்குழு கலந்துரையாடல் அட்டவணையில் இலங்கையின முன்னாள் நீதியரசரின் பதவிநீக்க விடயமும் அடக்கப்பட்டுள்ளது.
எனினும் அதில், இலங்கையில் பொதுநலவாய தலைவர்களின் அமர்வு நடத்தப்படுமா? நடத்தப்படாதா? என்ற தீர்மானங்கள் எடுக்கப்படும் என்பது தொடர்பில் தம்மால் கருத்துக்கூற முடியாது என்று சேகல் குறிப்பிட்டுள்ளார்.
கனேடிய அரசாங்கம், அங்குள்ள தமிழர்களின் வாக்குகளை நோக்காக கொண்டு செயற்படுகிறது என்று கூறப்படும் குற்றச்சாட்டை சேகல் மறுத்துள்ளார்.
தமது பயணத்தை இலங்கையின் கனேடிய உயர்ஸ்தானிகரமே ஒழுங்கு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten