தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 maart 2013

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா நீர்த்து போக செய்தது: கருணாநிதி குற்றச்சாட்டு !


ஐ.நா., மனித உரிமை கழகத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கையின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு நீர்த்துப் போக செய்து விட்டதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தி.மு.க., அறிவித்தது.
இதனையடுத்து நேற்று இரவு தி.மு.க., எம்.பி.,க்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதற்கான கடிதத்தை கொடுத்தது.
இன்று மதியம் தி.மு.க., சார்பில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தனர்.
இந்நிலையில், இன்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், பாராளுமன்றில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை குறித்து முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்துக்கள் கண்டனத்திற்க்குரியவை.
இலங்கை இராணுவம் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தியதை போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை என திருத்தம் கொண்டு வர வேண்டும் என தி.மு.க., கோரிக்கை வைத்தது.
மேலும் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.
நமது கோரிக்கைப்படி, ஐ.நா., மனித உரிமை கழகத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை தீர்மானத்தில் சேர்க்கப்படவில்லை.
தீர்மானத்தில் இலங்கை அரசு விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவோம் என கூறப்பட்டுள்ளது.
இது போல், பல வழிகளில் அமெரிக்க தீர்மானம் பெருமளவில் நீர்த்துப்போக செய்யப்பட்டுள்ளது.
இதற்கு இந்திய அரசு இலங்கை அரசு ஐ.நா.,மனித உரிம கழகத்தில் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு, தீர்மானத்தை நீர்த்து போக செய்துள்ளது.
இதற்காக ஆம்னெஸ்டி அமைப்பும், இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபோன்று தி.மு.க.,வின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் தான், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டோம் என கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten