தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 4 maart 2013

Sri Lanka objects to clearance given for GTF meet


ஜீ.ரீ.எப் மாநாட்டை பிரிட்டன் நாடாளுமன்றில் நடாத்தியமைக்கு இலங்கை எதிர்ப்பு
[ திங்கட்கிழமை, 04 மார்ச் 2013, 06:47.56 AM GMT ]
ஜீ.ரீ.எப். மாநாட்டை பிரிட்டன் நாடாளுமன்றில் நடாத்தியமைக்கு இலங்கை வெளிவிகார அமைச்சு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
குளோபல் தமிழ் போரம் என்ற ஜீ.ரீ.எப் என்ற தமிழ் அமைப்பின் நிகழ்வொன்று பிரிட்டனில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் சிரேஸ்ட அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இலங்கை விரோத கோட்பாட்டைக் கொண்ட குறித்த அமைப்பின் மாநாட்டில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றமை அதிருப்தி அளிப்பதாக வெளிவிவகார அமைச்சு, பிரிட்டனிடம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரத்தின் ஊடாக இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வை முன்னிட்டு பிரிட்டன் பிரதமர் அறிக்கை வெளியிட்டதுடன், எதிர்க்கட்சித் தலைவர் இட் மில்லிபாண்ட் உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/show-RUmryDTYNYls1.html
Sri Lanka objects to clearance given for GTF meet
[ Monday, 04 March 2013, 09:00.40 AM GMT +05:30 ]
The Sri Lankan government has objected to the clearance given to hold an anti-government meeting at the British parliament premises last week.
An External Affairs Ministry spokesman said that the government had also raised objections with the British Foreign office after officials of the British government also attended the meeting.
Leader of the British Opposition and Labour Leader Ed Miliband, Secretary of State for Energy and Climate Change Ed Davey and Shadow Foreign Secretary Douglas Alexander were also in attendance in the Global Tamil Forum (GTF) meeting.
“Our High Commission in London had conveyed our concerns on the participation of some British government officials at the conference,” External Affairs Ministry spokesman Rodney Perera said today. 

http://eng.lankasri.com/view.php?2034Y5B220eYmBd34eaemOln4cadQWAAcddcAUMQAdac4dlOmae43dBmY3e022B5Y402


பிரிட்டிஷ் அரசின் நடவடிக்கைக்கு இலங்கை அதிருப்தி! புலிகள் சார்பு மாநாட்டை நடத்த அனுமதித்தமைக்கு எதிர்ப்பு
[ திங்கட்கிழமை, 04 மார்ச் 2013, 11:46.40 PM GMT ]
விடுதலைப் புலிகள் சார்பு அமைப்பான உலகத் தமிழர் அமைப்பின் ஆண்டு விழாவினை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நடத்த அந்நாட்டு அரசாங்கம் அனுமதித்தமைக்கு இலங்கை அரசு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
பிரிட்டனில் விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னமும் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இவ்வாறான ஒரு அமைப்பிற்கு சார்பாக குரல் கொடுத்து வரும் உலகத் தமிழர் அமைப்பின் ஆண்டு விழாவிற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்துள்ளமை தவறு எனவும் இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இம்மாநாட்டினை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நடத்த இடமளித்தமை மற்றும் அந்நாட்டின் அரசாங்கப் பிரதிநிதிகள் அதில் கலந்து கொண்டமை தவறான செயலெனவும் இலங்கை அரசு பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இவ் விடயம் தொடர்பிலான முழுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளது.
உலகத் தமிழர் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் கிரிஸ் நோனிஸ் தலைமையில் பல்வேறு வழிகளில் எதிர்ப்புகள் வெளிக்காட்டப்பட்டன.
இந்நிலையில், நடைபெற்று முடிந்த மாநாட்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டமைக்கு இலங்கை அரசின் முழுமையான எதிர்ப்பினை பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சுக்கு எழுத்து மூலமாகவும் வாய் மொழி மூலமாகவும் தெரியப்படுத்தியுள்ளதென இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் உலகத் தமிழர் அமைப்பு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆண்டு விழா கொண்டாட அந்நாட்டு அரசாங்கம் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சிடம் இலங்கை அரசு சார்பில் அங்குள்ள உயர்ஸ்தானிகராலயம் கடும் ஆட்சேபத்தினை வெளிக்காட்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் நோர்வேயின் சமாதானத்துக்கான முன்னாள் விசேட தூதுவர் எரிக் சொல்ஹேய்ம், பிரிட்டிஷ் எதிர்க்கட்சித் தலைவர், பிரிட்டனின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் மிலிபேன்ட், பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

Geen opmerkingen:

Een reactie posten