தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 4 maart 2013

காணாமல் போனோர் மற்றும் தடுப்புக்கைதிகள் குடும்பத்தவர்கள் புதன்கிழமை கொழும்பில் ஒன்று கூடல்!- மனோ கணேசன் !


வட-கிழக்கு மாகாண காணாமல் போனோர் மற்றும் தடுப்புக்கைதிகள் குடும்பத்தவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் புதன்கிழமை நடைபெறவுள்ள ஒன்றுகூடலில் காணாமல் போனவர்களது மற்றும் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்போர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வட கிழக்கில் இருந்தும், நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களது மற்றும் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்போர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த ஒன்றுகூடலில் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது,
இந்த காணாமல் போனோர் மற்றும் தடுப்புக் கைதிகள் குடும்பத்தவர்களின் ஒன்று கூடலுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி வட-கிழக்கு மாகாண காணாமல் போனோர் மற்றும் தடுப்புக் கைதிகள் குடும்பத்தவர்களின் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் விடுத்துள்ள கோரிக்கையை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்.
இந்த அடிப்படையில் மார்ச் 6ம் திகதி புதன்கிழமை காலை 9 மணி முதல் கொழும்பில் இடம்பெற உள்ள இந்த ஒன்று கூடலுக்கு மக்கள் கண்காணிப்பு குழு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.
வட கிழக்கில் இருந்தும், நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களது குடும்ப உறுப்பினர்களது, விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் குடும்ப உறவுகள் இந்த ஒன்றுகூடலில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.
ஒன்றுகூடல் நிகழ்வின் நிகழ்ச்சிநிரல் பின்னர் அறிவிக்கப்படும்.
http://news.lankasri.com/show-RUmryDTYNYlt1.html

Geen opmerkingen:

Een reactie posten