இலங்கை விவகாரத்தில் UN உரிய முறையில் கடமையாற்றத் தவறியது – நவனீதம்பிள்ளை -
இலங்கை விவகாரகத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் கடமையாற்றத் தவறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். குறிப்பாக இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களை பாதுகாக்கும் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பங்களிப்பானது திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நவனீதம்பிள்ளை 2012ம் ஆண்டுக்கான அறிக்கையையும் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் கடமையாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு, ஓர் எச்சரிக்கை சமிக்ஞையாக கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட மீளாய்வு அறிக்கையில், ஐக்கிய நாடுகள் அமைப்பு கடமை தவறியதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
- See more at: http://www.jvpnews.com/srilanka/16864.html#sthash.ZPKPKS08.dpufNavi Pillay welcomes report on UN actions in Sri Lanka |
[ Friday, 01 March 2013, 11:48.03 AM GMT +05:30 ] |
The UN High Commissioner for Human Rights Navi Pillay, speaking at the UN Human Rights Council (UNHRC) today after submitting her annual report for 2012, said she welcomed the release of the report of the internal review panel on the United Nations actions in Sri Lanka during the last phase of the conflict. |
Pillay said that the report released last year concluded that there was a systematic failure on the part of the United Nations.
“It is a powerful reminder that the United Nations, wherever we are, has a duty to live up to the principles and standards we promote,” she said.
The report by the Internal Review Panel released last November concluded that “events in Sri Lanka mark a grave failure of the UN to adequately respond to early warnings and to the evolving situation during the final stages of the conflict and its aftermath, to the detriment of hundreds of thousands of civilians and in contradiction with the principles and responsibilities of the UN.
இலங்கையில் ஐநா வின் செயற்பாடுகள் குறித்த மீளாய்வு அறிக்கையை நவநீதம்பிள்ளை வரவேற்றுள்ளார்!
நேற்றைய தினம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் தமது வருடாந்த அறிக்கையை வெளியிட்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
- See more at: http://news.lankasri.com/show-RUmryDTVNYmq2.html#sthash.m1Chcz5i.dpufஇறுதி யுத்த காலப் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை பொது மக்களை பாதுகாக்க தவறிவிட்டதாக, ஜோன் பெற்றி தயாரித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை தமது செயற்பாட்டினை ஆராய முன்வந்தமை வரவேற்கத்தக்கது. ஐக்கிய நாடுகள் சபை இறுதி யுத்த காலப் பகுதியில் பொது மக்களை பாதுகாக்க தவறியமையை ஏற்றுக் கொள்ள முடியாது. உலக நாடுகளுக்கு சபை முன்வைக்கின்ற கொள்கைகள் மற்றும் சட்டதிட்டங்களின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையும் செயற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே குறித்த 'நோ பயர் சோன்" ஆவணப்படம் இன்று மனித உரிமைகள் மாநாட்டில் காட்சிப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
Geen opmerkingen:
Een reactie posten