முஸ்லிம்கள் தலைக்கு தொப்பி வைத்தாலோ, பெண்கள் பர்தா அணிந்தாலோ அதில் தவறில்லை, எனினும், எங்களுக்கும் தொப்பியும் பர்தாவும் அணிவிக்க முயற்சித்தால் அதனை ஏற்க முடியாது.
ஹலாலிற்கு பௌத்தர்களோ, பௌத்த பிக்குகளோ எதிர்ப்பை வெளியிடவில்லை.
எதிர்ப்பை வெளியிட வேண்டிய அவசியமும் கிடையாது.
ஹலால் பேரில் இடம்பெறும் துர்நடத்தைகளையே நாம் எதிர்க்கின்றோம்.
முஸ்லிம் கலாச்சாரத்தை, இஸ்லாமிய மத கோட்பாடுகளை ஏனைய இன சமூகத்தின் மீது திணிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதன் போது வழங்கப்பட்ட உதவிகளை ஹலால் ஹராம் என முஸ்லிம்கள் வகையீடு செய்து பெற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
|
Geen opmerkingen:
Een reactie posten