பிரிட்டனின் சனல்-4 ஊடகத்திற்கு இரகசியமாக உதவிகளை வழங்கும் தரப்பினர் இருந்தால் அவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்களிடம் கோரியுள்ளது.
சிலர் தாய் நாட்டை மறந்து, சில நன்மைகளுக்காக சனல்-4 ஊடகத்திற்கு உதவிகளை வழங்கி வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறான நபர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றால் உடனடியாக அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கச்சத்தீவு தொடர்பில் தமிழகம் எவ்வறான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், அதனால் நாட்டுக்கு எவ்வித பாதிக்கும் கிடையாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten