காணாமல் போன தமது உறவுகளை தேடித்தருமாறு கோரும் போராட்டத்துக்காகவே அவர்கள் வவுனியாவில் இருந்து கொழுப்புக்கு சென்றனர். எனினும் அவர்களை தடுத்து நிறுத்தியமை நியாயமான செயலல்ல.
அத்துடன் குறித்த பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு மதிப்பளித்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அமரிக்கா தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை சர்வதேச சட்டங்களுக்கு அமைய சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவதற்கும் பொதுமக்களை பாதுகாப்பதற்கும் கடமைப்பட்டுள்ளதாக தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் ஜெனிவாவில் பிரேரணை ஒன்றை நிறைவேற்றுவதற்காக அமெரிக்கா ஏனைய நட்பு நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.
அத்துடன் இலங்கை தமது சொந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அத்துடன், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்கத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten