ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிம்சாமி கடந்த 28ம் திகதி கொழும்பு சென்று ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ச மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழகத்தில் குரல் ஓங்கி ஒலிக்கையில் சுப்பிரமணிம்சாமியின் செயல் பலரை எரிச்சல் அடைய வைத்துள்ளது.
இதனையடுத்து, மதுரை சொக்கிகுளத்தில் உள்ள ஜனதா கட்சி அலுவலகத்தை சுமார் 35 பேர் கொண்ட கும்பல் கல் வீசித் தாக்கியது.
இந்த தாக்குதலில் கட்சி அலுவலகத்தின் பெயர் பலகை சேதம் அடைந்தது. தாக்குதல் நடத்திய கும்பலில் மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் அடங்குவதாக இந்திய தகவல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Geen opmerkingen:
Een reactie posten