தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 5 maart 2013

யாழ். கல்வியங்காடு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்!


யாழ். கல்வியங்காடு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாக மனைவி பொலிஸ் மற்றும் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
கடந்த 3ம் திகதி வீட்டிலிருந்து கடையொன்றுக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர் இன்று வரை வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ப. இராஜேந்திரன் (வயது39)  என்ற 3பிள்ளைகளின் தந்தையே காணாமல் போயுள்ளார்.
குறித்த நபர் 2006ம் ஆண்டு காலப்பகுதியில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் இறந்து விட்டதாக கருதி தூக்கி வீசப்பட்ட நிலையில் குற்றுயிராக மீட்கப்பட்டவராவார்.
இதற்காக இன்றுவரையில் மருத்து வ சிகிச்சை பெற்றுவரும் இவர், கடந்த சில தினங்களாக தம்மை யாரோ அச்சுறுத்துவதாகவும், பின்தொடர்வதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்நிலையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் குறித்த நபர் காணாமல் போயுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten