இலங்கைக்கு எதிரான ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்பட உள்ள யோசனை தொடர்பாக அடுத்த வாரம் நடத்தப்பட உள்ள வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்தால், வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் குழு இலங்கைக்கு செல்வதை தடுக்க முடியாது என ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்தால், வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கைக்குள் செல்வதற்கு சட்டரீதியான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் தெரியவருகிறது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என சில நாடுகள் இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் இந்த யோசனையின் நோக்கம், வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை இலங்கைக்குள் அனுப்பி வைப்பதற்காகும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை சில மத்திய கிழக்கு நாடுகள் இந்த வாக்கெடுப்பில் எவ்வாறான நிலைப்பாடுகளை எடுக்கும் என்பதை உறுதியாக கூறமுடியாது. இம்முறை வாக்கெடுப்பு இலங்கை சாதகமாக அமையும் சந்தர்ப்பங்கள் குறைவாக இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகள் தமக்கு சாதகமான நிலைமை இல்லாத நிலையில் இப்படியான யோசனை கொண்டு வருது பொருத்தமற்றது. மத்திய கிழக்கை சேர்ந்த நாடுகள் சில இலங்கை தொடர்பான அமெரிக்காவின் யோசனை தொடர்பில் காட்டிய மௌனம் இலங்கைக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten