இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டுப்போட வேண்டும் என தமிழக கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தை கௌரவ பிரச்சினையாக நினைக்காமல் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் என இலங்கையை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா., மனித உரிமை கூட்டத்தில், இலங்கையில் நடந்த போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரவுள்ளது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என தமிழக கட்சிகள் மத்திய அரசை வலியுறத்தி வருகின்றன. மேலும் இதனை வலியுறுத்தி வரும் 12ம் தேதி பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.
ஐ.நா.,வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் குறித்து, பாராளுமன்றத்திற்கு வெளியே பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்,
அமெரிக்காவுடன் இணைந்து இலங்கை செயல்பட்டு அனைவரும் ஏற்கக்கூடிய ஒரு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும். இதன் பின்னர் இந்தியா ஒரு முடிவு எடுக்கும்.
இந்த நேரத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கூறியுள்ளேன்.
அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
இது மனிதாபிமான விவகாரம். இதில் ஒவ்வொருவரும் தனது நிலையில் விடாப்பிடியாக இருக்கக்கூடாது.
இந்த விவகாரத்தில், பேச்சுவார்த்தை நடத்த முடியுமானால், பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என கூறினார்.
http://www.tamilwin.net/show-RUmryDTaNYkt1.html
Geen opmerkingen:
Een reactie posten