தி.மு.கவின் போலி பிரசாரத்தை சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளரும், இலங்கையின் கொலைக்களம் காணொளியின் தயாரிப்பாளருமான கெல்லம் மெக்ரே நிராகரித்தார்.
இலங்கை தமிழர்களின் விடயத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்காக, அதன் உப தலைவர் மு.க.ஸ்டாலினை, சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரே பாராட்டியதாக, திமுக பிரசாரம் செய்து வந்தது.
நேற்றைய தினம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற்ற போது, கட்சி சார்பில் உரையாற்றி இருந்த உறுப்பினர் ஒருவர் இதனைத் தெரிவித்தார்.
இதனை மு.க ஸ்டாலினும் ஆமோதித்தார்.
இது தொடர்பில் கெலம் மெக்ரேயின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் வழங்கியுள்ள கெல்லம் மெக்ரே, எல்லா நன்மனம் படைத்தவர்களும், இலங்கை தமிழர்களுக்கான நீதியும், நியாயும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
ஆனால் தாம் தனிப்பட்ட எந்த கட்சியையும் இதற்காக பாராட்டவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தி.மு.க இலங்கை விடயத்தை வைத்து தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது என்பது புலனாகிறது.
Geen opmerkingen:
Een reactie posten