தமிழீழம் அமைய போராடும் மாணவர்களுக்காகவும் , தமிழீழம் அமைய இலங்கையின் மீது சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தியும் , ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு கோரியும் இந்த ஒன்று கூடல் நடைபெற்றது.
இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் பெரும்திரளாக கலந்து கொண்டு தங்கள் தமிழ் ஈழத்திற்கான தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
அனைவரும் தமிழீழமே ஒரே தீர்வு என்ற முழக்கத்தை முன்வைத்தனர்.
இலங்கையில் நடந்தது போற்குற்றமல்ல , அது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை என்ற செய்தியை அழுத்தமாக பதிவு செய்தனர். இந்த நிகழ்விற்கு பீகாரில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் திரு சோம் பிரகாஷ் வருகை தந்திருந்தார்.
இவர் ராஜக்பக்சே பீகார் வந்த போது அவனுக்கு எதிராக கறுப்புக் கொடி ஏந்தி முழக்கமிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு பழ நெடுமாறன் , திரு வைகோ போன்ற தலைவர்கள் இந்த கூட்டத்திற்கு வந்து சிறப்புரை ஆற்றினர்.
அனைவரும் தமிழீழமே ஒரே தீர்வு என்று விண்ணதிர முழக்கமிட்டனர்.
ஐநா வில் அமெரிக்க கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் நகலை மாணவர்கள் தீயிட்டு கொளுத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten