இலங்கையின் எதிர்ப்பையும் மீறி, சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள “நோ பயர் ஸோன்” போர்க்குற்றம் தொடர்பான ஆவணப்படம் இன்று ஜெனிவாவில் திரையிடப்பட்டது.
“நோ பயர் ஸோன்” என்ற அந்த ஆவணப்படம் முதன்முறையாக ஐ.நா. மனித உரிமை அவைக்கு அருகேயுள்ள மற்றொரு அரங்கில் இத்திரைப்படத்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பார்வையாளர்களாக கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆவணப்படத்தில், பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மற்றும் இலங்கைத் தமிழர்கள், விடுதலைப்புலிகள் ஆகியோரை கொடூரமான முறையில் இலங்கை இராணுவத்தினர் கொலை செய்வது குறித்த காட்சிகள் அடங்கியுள்ளன.
போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச குழுவை இலங்கை அனுமதிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழர்கள் அங்கு சமூக நல்லிணக்கத்துடன் வாழ வழி ஏற்படும் என்றும் ஆவணப்படத்தின் இயக்குநர் கெலம் மெக்ரே தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு-
சானல் 4 தொலைக்காட்சியின் “நோ பயர் ஸோன்” என்ற ஆவணப்படம் இன்று ஜெனிவாவில் ஐநா வளாகத்தில், மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்காக வந்திருந்தவர்களுக்காக ஐநாவின் 23 வது அறையில் அது திரையிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் இந்தப் படத்தை அங்கு திரையிட அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருந்தபோதிலும், ஐநாவில் கருத்து சுதந்திரத்தை தடுக்க முடியாது என்ற அடிப்படையில் அது அங்கு திரையிடப்பட்டதாக அங்கு அந்த படத்தை பார்த்தவர்களில் ஒருவரான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐநா நடவடிக்கைகளுக்கான இணைப்பாளரான முருகையா சுஜிந்தன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வலயத்தில் நடந்ததாகக் கூறப்படும் குற்றங்கள், சிறுவர்கள் இந்தப் போரினால் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்பது போன்ற பல விடயங்களை அந்தப் படம் காண்பித்ததாகவும், பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் மற்றும் சிறுவன் பாலச்சந்திரனின் கொலை குறித்த தகவல்கள் ஆகியனவும் அதில் அதிகம் இடம்பெற்றதாகவும் சுஜிந்தன் கூறினார்.
அந்த மண்டபத்துக்கு வந்திருந்த ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க அவர்கள், இந்தப் படம் புனையப்பட்ட காட்சிகளை காண்பித்தது என்று கூறியிருக்கிறார்.
மேலும், அங்கு பேசிய இலங்கையில் நடந்த போர் நிகழ்வுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஐநா மன்ற செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவைச் சேர்ந்த ஜாஸ்மின் சூகா அவர்கள், இலங்கை போர் நிகழ்வுகள் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்பதை இது உறுதி செய்கிறது கூறியதாகவும் சுஜிந்தன் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி-
“நோ பயர் சோன்” ஐ.நாவில் திரையிடுவதை தடுக்கமுடியாது!- ஐ. நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம்
- See more at: http://news.lankasri.com/show-RUmryDTVNYmq5.html#sthash.uygoCVE8.dpufபல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பார்வையாளர்களாக கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆவணப்படத்தில், பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மற்றும் இலங்கைத் தமிழர்கள், விடுதலைப்புலிகள் ஆகியோரை கொடூரமான முறையில் இலங்கை இராணுவத்தினர் கொலை செய்வது குறித்த காட்சிகள் அடங்கியுள்ளன.
போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச குழுவை இலங்கை அனுமதிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழர்கள் அங்கு சமூக நல்லிணக்கத்துடன் வாழ வழி ஏற்படும் என்றும் ஆவணப்படத்தின் இயக்குநர் கெலம் மெக்ரே தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு-
சானல் 4 தொலைக்காட்சியின் “நோ பயர் ஸோன்” என்ற ஆவணப்படம் இன்று ஜெனிவாவில் ஐநா வளாகத்தில், மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்காக வந்திருந்தவர்களுக்காக ஐநாவின் 23 வது அறையில் அது திரையிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் இந்தப் படத்தை அங்கு திரையிட அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருந்தபோதிலும், ஐநாவில் கருத்து சுதந்திரத்தை தடுக்க முடியாது என்ற அடிப்படையில் அது அங்கு திரையிடப்பட்டதாக அங்கு அந்த படத்தை பார்த்தவர்களில் ஒருவரான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐநா நடவடிக்கைகளுக்கான இணைப்பாளரான முருகையா சுஜிந்தன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வலயத்தில் நடந்ததாகக் கூறப்படும் குற்றங்கள், சிறுவர்கள் இந்தப் போரினால் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்பது போன்ற பல விடயங்களை அந்தப் படம் காண்பித்ததாகவும், பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் மற்றும் சிறுவன் பாலச்சந்திரனின் கொலை குறித்த தகவல்கள் ஆகியனவும் அதில் அதிகம் இடம்பெற்றதாகவும் சுஜிந்தன் கூறினார்.
அந்த மண்டபத்துக்கு வந்திருந்த ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க அவர்கள், இந்தப் படம் புனையப்பட்ட காட்சிகளை காண்பித்தது என்று கூறியிருக்கிறார்.
மேலும், அங்கு பேசிய இலங்கையில் நடந்த போர் நிகழ்வுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஐநா மன்ற செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவைச் சேர்ந்த ஜாஸ்மின் சூகா அவர்கள், இலங்கை போர் நிகழ்வுகள் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்பதை இது உறுதி செய்கிறது கூறியதாகவும் சுஜிந்தன் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி-
“நோ பயர் சோன்” ஐ.நாவில் திரையிடுவதை தடுக்கமுடியாது!- ஐ. நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம்
Geen opmerkingen:
Een reactie posten