தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 1 maart 2013

பிரேரணை குறித்து அமெரிக்காவும், இலங்கையும் நேரடியாக பேச வேண்டும்!- இந்தியா அறிவுறுத்து !


இலங்கைக்கு எதிராக இந்த முறை அமெரிக்க மனித உரிமைகள் மாநாட்டில் கொண்டு வரவுள்ள பிரேரணை தொடர்பில், அமெரிக்காவும், இலங்கையும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியா அறிவுறுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுகள் துறை அமைச்சர் சல்மன் குர்சித் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த பிரேரணை குறித்து இரண்டு தரப்பும் பேசிக்கொள்வதன் ஊடாக, முறையான இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அமெரிக்காவினால் மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையின் பிரதி ஒன்று இந்தியாவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய மத்திய அரசாங்கத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த பிரதியின்படி அமெரிக்கா தமது பிரேரணியில் முன்வைத்துள்ள சில பிரேரணைகள் இந்தியாவினால் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று கூறப்படுகிறது.
இதேவேளை, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக நேர்மையானதாகவும், சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியறவுத்துறை செய்தி தொடர்பாளர் பாட்ரிக் வென்ட்ரெல் கூறுகையில்,
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் மற்றும் பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டு தொடர்பாக இது வரை இலங்கை அரசு சுதந்திரமான விசாரணை நடத்தப்படவில்லை.
இலங்கையில் சர்வதேச மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதையும், அந்நாடு செய்த மனித உரிமை மீறலை தொடர்பான எங்களது கவலையை பதிவு செய்வோம்.
இலங்கை குறித்து ஐ.நா., மனித உரிமைகள் ஆணையம் தயாரித்துள்ள அறிக்கையை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம்.
இலங்கை மீது கொண்டு வரப்படும் மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானம் மிக வலுவானதாக இருக்கும் என கூறியுள்ளார்.
- See more at: http://news.lankasri.com/show-RUmryDTVNYmq3.html#sthash.sbeEpamn.dpuf

Geen opmerkingen:

Een reactie posten